📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 04, 2026 07:30 PM

முன்னாள் முதல்வர் கருணாநிதி 103

முன்னாள் முதல்வர் கருணாநிதி 103

| படம்: எல்.சீனிவாசன் |

சென்னை: ​முன்​னாள் முதல்​வர் கருணாநிதியின் பிறந்​த​நாளை ஒட்​டி, அவரது நினை​விடத்​தில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் உள்​ளிட்ட அரசி​யல் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தி​னார்.

மறைந்த முன்​னாள் முதல்​வர் மு.கருணாநி​தி​யின் 103-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது.

இதையொட்டி ஓமந்​தூ​ரார் அரசினர் தோட்ட வளாகத்​தில் அமைந்​துள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்​பில் பள்​ளிக்​கல்வி மற்​றும் தமிழ் வளர்ச்​சித் துறை அமைச்​சர் ராஜ் மோகன் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

முதல்​வர் விஜய் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில், ``முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் பிறந்​த​நாளில், தமிழ் மொழி, இலக்​கி​யம், திரைத்​துறை, அரசி​யல், ஆட்சி நிர்​வாகம் மற்​றும் மாநில உரிமை​கள் போன்​றவற்​றில் அவரது பங்​களிப்பை நினை​வு​கூரு​கிறேன். அவரது பிறந்த நாளில் எனது மரி​யாதை கலந்த வணக்​கங்​களை சமர்ப்​பிக்​கிறேன்'' என்று பதி​விட்​டிருந்​தார்.

மெரினா கடற்​கரை​யில் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த கருணாநி​தி​யின் நினை​விடத்​தில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

அவருடன் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், திமுக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி, பொன்​முடி, ஆ.ராசா எம்பி உள்​ளிட்​டோரும், தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை​யும் மரி​யாதை செலுத்​தினர்.

அதைத் தொடர்ந்து ஓமந்​தூ​ரார் அரசினர் தோட்ட வளாகத்​தி​லும், கோடம்​பாக்​கம் முரசொலி அலு​வல​கத்​தி​லும், தேனாம்​பேட்டை அண்ணா அறி​வால​யத்​தி​லும் உள்ள கருணாநிதி சிலைகளுக்கு மரி​யாதை செலுத்​திய மு.க.ஸ்​டா​லின், திமுக இளைஞரணி தலை​மையக​மான அன்​பகத்​தில் புதி​தாக நிறு​வப்​பட்​டுள்ள 75 அடி உயர கொடிக் கம்​பத்​தில் திமுக கொடியை ஏற்​றி​வைத்​து, அங்கு புதுப்​பிக்​கப்​பட்ட அலு​வல​கத்​தை​யும், பெரி​யார், அண்​ணா, கருணாநிதி ஆகியோரது மார்​பளவு சிலைகளை​யும் திறந்து வைத்​தார்.

பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளி​யிட்ட செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல்​காந்​தி: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி தமிழ் மக்​களின் கண்​ணி​யத்​துக்கா​வும், சமூக நீதிக்​காக​வும், விளிம்​புநிலை மக்​களின் உரிமை​களுக்​காக​வும் தன் வாழ்​நாள் முழு​வதும் போராடிய​வர்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்: வெற்​றியை தலை​யிலும், தோல்​வியை நெஞ்​சிலும் ஏற்​றாமல் சோதனை கடல்​களை சோர்​வின்றி நீந்​திக் கடந்த கருணாநி​தி​யின் ஆற்​றல் என்​னிட​மும் ஒவ்​வொரு தொண்​டரி​மும் இருக்​கிறது. உறு​தி​யாய் சொல்​கிறேன், மீண்​டும் வெற்றி சரிதத்தை எழுது​வோம்.

பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்: பெரி​யாரின் வழி​யில் சுயமரி​யாதை போராளி​யாய், அண்ணா வழி​யில் மொழி​யுரிமை, மாநில உரிமை​கள் காத்த தமிழின தலை​வ​ராய் வாழ்ந்த கருணாநி​தி​யின் புகழைப் போற்​று​வோம்.

விசிக தலை​வர் திரு​மாவளவன், மநீம தலை​வர் கமல் ​ஹாசன், திக தலை​வர் கி.வீரமணி, சு.​திரு​நாவுக்​கரசர்​ உள்​ளிட்​டோரும்​ கருணாநி​திக்​கு புகழாரம்​ சூட்​டியுள்​ளனர்​.