📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 19, 2026 03:03 PM

நடிகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு

நடிகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு

புதுடெல்லி: மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சந்து ஆகிய இருவர் பொறுப்பேற்றுள்ளனர்.

நடிகர் டைகர் ஷெராப் ஞாயிற்றுக்கிழமை மும்பையின் ஜூஹூவில் சுடப்பட்டார். அவர் கால்பந்து விளையாடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரது பிஎம்டபிள்யூ கார் மீது பலமுறை சுட்டனர். இதில், ஷெராப் அதிக காயமின்றி தப்பினார். அவரது தோளில் துப்பாக்கி குண்டின் துகள்கள் பட்ட காயம் ஏற்பட்டுள்ளது. அவரது ஓட்டுநரும் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக நானவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய தாதாக்களான அனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சந்து ஆகியோர் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளனர்.

அணில் பண்டிட் பெயரில் முகநூலில் பகிரப்பட்ட ஒரு பதிவில், சல்மான் கானுடன் பணியாற்றுவது குறித்து டைகர் ஷெராஃப் முன்னரே எச்சரிக்கப்பட்டதாகவும், இதை அவர் புறக்கணித்ததால் குறிவைக்கப்பட்டதாகவும் பதிவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தக் கூற்று காவல்துறையினரால் இன்னும் சரிபார்க்கப்படவில்லை. ஹரியானாவைச் சேர்ந்த அனில் பண்டிட், தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இதற்காக இந்தியாவிற்கு வந்திறங்கிய அவர் பிரபல குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

பண்டிட் இதற்கு முன்னர் பல தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளார். இவருடன் ஹர்மன் சந்துவும் வெளிநாட்டில் வசிக்கிறார். இதற்குமுன், பிரபல ஹரியானா பாடகர் திலர் கார்கியாவின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அணில் பண்டிட்டின் பெயர் அடிப்பட்டது.

நடிகர் ஷெராப்பைப் போல் அந்தப் பாடகரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அனில் பண்டிட் சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக, மும்பையின் ஜுஹு காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 109 (1), 3 (5) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், நடிகர் டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்திய இருவரது உருவங்களும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தாக்குதல் நடத்திய இருவரும் வெள்ளை நிறச் சட்டை அணிந்திருந்தனர்.

இதற்காகப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மும்பையில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. வாகனத்தின் நம்பர் பிளேட், சேஸிஸ் எண் மற்றும் என்ஜின் எண்களைக் கொண்டு, அதன் ஆவணங்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேக நபர்களை அடையாளம் காணவும், சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் சென்ற பாதையைக் கண்டறியவும் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.