📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 27, 2026 11:34 PM

பிரதமர் மோடி பதவியேற்று 12 ஆண்டு நிறைவடைந்தது: பாஜ தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் மோடி பதவியேற்று 12 ஆண்டு நிறைவடைந்தது: பாஜ தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் மோடி பதவியேற்று 12 ஆண்டு நிறைவடைந்தது: பாஜ தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: பிரதமராக மோடி கடந்த 2014ல் பதவியேற்ற நிலையில், தொடர்ந்து 3 மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மோடி நேற்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்கள் பட்டியலில் மோடி 2வது இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், 12 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு பாஜவைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘கடந்த 2014 மே 26ம் தேதி தொடங்கிய பிரதமர் மோடியின் பதவிக்காலம், வெறும் ஒரு அரசாங்க மாற்றத்தை மட்டுமல்லாமல், தேசம் தனது தன்னம்பிக்கையை மீட்டெடுத்ததையும், கலாச்சார மறுமலர்ச்சியை அடைந்ததையும் குறிக்கும் வரலாற்று சிறப்புமிக்க தருணமாக திகழ்கிறது.

கடைக்கோடி மனிதனுக்கும் நன்மைகள் சென்றடைய வேண்டுமென்ற கொள்கையால் வழிநடத்தப்படும் மோடி அரசின் திட்டங்கள் வெறும் காகித அளவில் நின்றுவிடாமல், ஒவ்வொரு குடிமகனின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக செயல்படுவதை உறுதி செய்துள்ளது. இந்த 12 ஆண்டுகால பயணம், 2047ல் வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கை அடைவதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது’’ என்றார்.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n