📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 27, 2026 06:04 PM

15 ஆண்டுகள் தேவையில்லை, 11 ஆண்டுகளே போதும்! 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்கள் வைத்த கோரிக்கை

15 ஆண்டுகள் தேவையில்லை, 11 ஆண்டுகளே போதும்! 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்கள் வைத்த கோரிக்கை

15 ஆண்டுகள் தேவையில்லை, 11 ஆண்டுகளே போதும்! 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்கள் வைத்த கோரிக்கை

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, தங்களது அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம் வரையிலான தொகையை ஒட்டுமொத்தமாக பெற்றுக்கொள்ள முடியும். இதற்குப் பதிலாக, அவர்களின் மாத ஓய்வூதியத்தில் குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படும். தற்போதைய விதிகளின்படி, இந்தத் தொகை 15 ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் முழு ஓய்வூதியமாக மீட்டெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த 15 ஆண்டு கால வரம்பை 10 முதல் 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

கோரிக்கையின் பின்னணி

தற்போது நடைமுறையில் உள்ள 15 ஆண்டு கால வரம்பு, சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கணக்கிடப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் ஆயுட்கால புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும்.

ஆனால், தற்போதைய காலகட்டத்தில் வட்டி விகிதங்கள் குறைந்துள்ளன, மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.

தற்போதைய கணக்கீட்டின்படி, ஓய்வூதியதாரர்களிடம் இருந்து பிடிக்கப்படும் கம்யூட்டேஷன் தொகை முழுமையாக 10 முதல் 11 ஆண்டுகளிலேயே அரசாரால் திரும்பப் பெறப்பட்டு விடுகிறது.

எனவே, 15 ஆண்டுகள் வரை பிடிப்பது நியாயமற்ற கூடுதல் வசூலாகும் என அமைப்புகள் வாதிடுகின்றன.

உதாரணமாக, மாதம் ₹35,000 அடிப்படை ஓய்வூதியம் பெறும் ஒருவர் அதில் 40 சதவீதமான ₹14,000 தொகையைக் கம்யூட் செய்கிறார் என வைத்துக்கொள்வோம்.

11 ஆண்டுகளில் ஓய்வூதியம் மீட்கப்பட்டால், அவர் மொத்தம் ₹18.48 லட்சம் இழப்பார்.

ஆனால், தற்போதைய 15 ஆண்டு விதியின்படி அவர் மொத்தம் ₹25.20 லட்சம் இழக்க நேரிடுகிறது.

இந்த மீட்புக் காலம் 11 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டால், அந்த ஓய்வூதியதாரருக்குக் கூடுதலாகப் பிடிக்கப்படும் ₹6.72 லட்சம் பணம் மிச்சமாகும் எனப் ஓய்வூதியர் அமைப்புகள் கணக்கீடுகள் மூலம் விளக்கியுள்ளன.

தேசியக் கூட்டமைப்பு (NC-JCM), ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் மற்றும் பாரத் ஓய்வூதியர் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் 1981 ஆம் ஆண்டின் மத்திய சிவில் சர்வீசஸ் விதிகளில் திருத்தம் செய்யக் கோரியுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட நிதி மற்றும் மக்கள் தொகை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் புதிய கம்யூட்டேஷன் அட்டவணையை உருவாக்க வேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன.

8வது ஊதியக் குழுவின் இறுதிப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மட்டுமே இந்த விதிகளில் மாற்றம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.