15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஏ.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பட்டுக்கோட்டை உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.அங்கிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.அஸ்வினி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் பண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக டிஜே. சத்ரிய கவின் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.இன்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.மஞ்சுமா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக மண்ணம் சுஜித் சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக நீல் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக கே.நேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிரியங்கா பார்கவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ராகுல் வி கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக சைந்தானே ஸ்வப்னிலா அனில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக தனூ சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகரம், அண்ணா நகர் சரகத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் புனியா நியமிக்கப்பட்டுள்ளார்.