📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 11, 2026 02:04 PM

15 வயதில் ரூ.10 கோடி சொத்து.. வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த ஜாக்பாட்.. தேடி வந்த 5 விளம்பர ஒப்பந்தம்

15 வயதில் ரூ.10 கோடி சொத்து.. வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த ஜாக்பாட்.. தேடி வந்த 5 விளம்பர ஒப்பந்தம்

15 வயதில் ரூ.10 கோடி சொத்து.. வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்த ஜாக்பாட்.. தேடி வந்த 5 விளம்பர ஒப்பந்தம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் 15 வயதிலேயே அறிமுகமாகி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது விளம்பர உலகிலும் தடம் பதித்து வருகிறார். அவரது சிறப்பான ஆட்டத்தால் பல முன்னணி நிறுவனங்கள் அவரை தங்களது விளம்பர தூதராக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2026 ஐபிஎல் தொடரில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி அதிக ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று இருந்தார். அதன்பின் அவரது பிராண்ட் மதிப்பு வெகுவாக உயர்ந்தது. தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ. 7 முதல் 10 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐபிஎல் சம்பளம், போட்டி கட்டணங்கள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் இவருக்கு வருவாய் கிடைக்கிறது. ஐபிஎல் தொடருக்குப் பிறகு இவர் ஒரு விளம்பர ஒப்பந்தத்திற்கு ரூ. 1 கோடிக்கும் மேல் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை வைபவ் சூர்யவன்ஷி ஐந்து விளம்பர ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவை இங்கே -

எஸ்எஸ் பேட்ஸ் (SS Bats): பிரபல விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான சரீன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஆண்டுக்கு சுமார் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார். இந்நிறுவனம் "வைபவ் சூர்யவன்ஷி எடிஷன்" என்ற சிறப்பு பேட்டுகளையும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

காம்ப்ளான் (Complan): 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காம்ப்ளான் நிறுவனத்தின் ஊட்டச்சத்து விளம்பரத்தில் வைபவ் சூர்யவன்ஷி நடித்தார்.

கூகுள் பே (Google Pay): இளைஞர்களைக் கவரும் வகையில் கூகுள் பே விளம்பரத்தில் நடித்துள்ளார். இதில் தனது பெற்றோரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யூபிஐ-ஐ பாதுகாப்பாக பயன்படுத்துவது போன்ற காட்சி இடம் பெற்றது.

ரெட் புல் (Red Bull): ஐபிஎல் தொடரின் போது தனது ராஜஸ்தான் ராயல்ஸ் சக வீரர் துருவ் ஜூரலுடன் இணைந்து ரெட் புல் சவாலில் (30 பந்துகளில் 60 ரன்கள்) பங்கேற்றார்.

ஜார்கண்ட் சுகாதாரத் துறை: ஜார்கண்ட் மாநில இளைஞர்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க ஊக்குவிக்கும் வகையில், அம்மாநிலத்தின் சுகாதார தூதராக மே 2026 இல் வைபவ் நியமிக்கப்பட்டார்.

மிக இளம் வயதிலேயே வணிக ரீதியாக பெரிய உயரத்தை எட்டியுள்ள போதிலும், அவரது குடும்பத்தினர் அவரை அதிகப்படியான விளம்பரங்களில் ஈடுபடுத்தாமல், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் கவனம் செலுத்தவே விரும்புகின்றனர் என கூறப்படுகிறது.