📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 24, 2026 10:03 AM

2,482 காலிப்பணியிடங்கள்; பரோடா வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை

2,482 காலிப்பணியிடங்கள்; பரோடா வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை

ETV Bharat / education-and-career

2,482 காலிப்பணியிடங்கள்; பரோடா வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

பரோடா வங்கியில் உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி தமிழ்நாட்டில் மட்டும் 132 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Published : August 24, 2026 at 8:00 AM IST

புது டெல்லி: பரோடா வங்கியில் உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பதவியில் காலியாக உள்ள 2,482 பணியிடங்களுக்கு இணையதளம் வழியாக செப்டம்பர் 9 வரை விண்ணப்பம் பெறப்படுகிறது.

வங்கி பணியை எதிர்பார்க்கிறவர்களுக்கு இந்த மாதம் ஏராளமான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், பொதுத்துறை வங்கிகளின் முதன்மையான இடத்தில் உள்ள பரோடா வங்கியில் உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பம் பெறப்படுகிறது.

இந்தியாவில் முழுவதும் 2,482 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 132 காலிப்பணியிடங்கள் உள்ளன.

காலிப்பணியிடங்களின் விவரம்

தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்கள் பொதுப்பிரிவு - 52, பொதுப்பிரிவு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 12, ஒபிசி - 36, எஸ்சி - 20, எஸ்டி - 12 என நிரப்பப்படுகிறது. இதில் 6 காலிப்பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு என்ன?

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். இதில் எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு தளர்வு வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி என்ன?

அதே போன்று, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மேலும், இந்தியக் காப்பீட்டு நிறுவனம், பரஸ்பர நிதி விநியோகஸ்தர்களுக்கான சான்றிதழ் தேர்வு, தொகுப்பு மேலாண்மை சேவைகள் உள்ளிட்டவற்றின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அனுபவம் முக்கியம்

இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் அதிகாரி அளவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மொழி கட்டாயம்

இப்பதவிக்கு அந்தந்த மாநிலங்களின் மொழிக்கான மொழி கல்வி பெற்றிருப்பது அவசியமாகும். தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் மொழியில் படிக்க, எழுத, பேச மற்றும் புரிந்துகொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

இப்பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ. 48,480 ஆகும். அதன்படி, ரூ.48,480 முதல் ரூ. 85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

பரோடா வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆட்களை செய்ய கணினி வழித் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் மற்றும் மொழி தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யபடுவடுவார்கள்.

கணினி வழித் தேர்வானது ஆங்கிலம், வங்கி அறிவு, பொது/ பொருளாதார விழிப்புணர்வு, காரணம் அறிதல் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும். இதில் 120 மதிப்பெண்களுக்கு 120 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கில பிரிவை தவிர இதர பிரிவுகளை தமிழ் மொழியிலும் எழுதலாம்.

இதற்கு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், விருதுநகர், தஞ்சை, கடலூர், கன்னியாகுமரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மையம் அமைக்கப்படும்.

இதில் தேர்வாகும் நபர்கள் மொழித் தகுதித் தேர்வை எழுத வேண்டும். 10 அல்லது 12-ம் வகுப்பில் தமிழ் பாடத்தை ஒரு பாடமாக கொண்டு படித்தவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, குழு கலந்துரையாடல் அல்லது நேர்காணல் மூலம் அடுத்தக்கட்ட தேர்வு நடத்தப்படும். நேர்காணலின் போது அனைத்து ஆவணங்களை தேர்வர்கள் சமர்பிக்க வேண்டும்.

இறுதியாக பல்வேறு கட்ட தேர்வு முறையில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள்.

உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் https://bankofbaroda.bank.in/career என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக ரூ. 850 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய விண்ணப்பதார்கள் ரூ.175 செலுத்தினால் போதுமானது.

முக்கிய நாட்கள்

இப்பணியிடங்களுக்கான தேர்வுக்கான தேதி, அட்மிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். இப்பணி குறித்து கூடுதல் தகவல்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.