📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Malaysia Tamil May 27, 2026 10:32 PM

மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம்

மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம்

மலேசியாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கம்புங் பஹாகியா என்ற இடத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. தீ விபத்து காரணமாக 400 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.

பலர் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். கடலோரத்தில் நீரின் மீது கட்டப்பட்ட தற்காலிக குடில்கள் என்பதால் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் கடும் முயற்சியில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடங்களை வழங்க உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பே தற்போதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.