📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 20, 2026 07:33 AM

"200 யூனிட் இலவசம் என்று கூறிவிட்டு மின்கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள்"

"200 யூனிட் இலவசம் என்று கூறிவிட்டு மின்கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள்"

"200 யூனிட் இலவசம் என்று கூறிவிட்டு மின்கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள்"- மூர்த்தி

200 யூனிட் இலவசம் என்று கூறிவிட்டு மின்கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள் என முன்னாள் அமைச்சர் மூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி, “200 யூனிட் இலவசம் என்று கூறிவிட்டு மின்கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். அமைச்சர் நிர்மல்குமார் தினந்தோறும் செய்தியாளர்களை மட்டுமே சந்தித்து கொண்டிருக்கிறார். நிர்மல்குமார் பொத்தாம் பொதுவாக எதுவும் சொல்ல கூடாது. முதலமைச்சரின் நிழல் அமைச்சராகத்தான் நிர்மல்குமார் உள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்சனையை அமைச்சர் நிர்மல்குமார் முதலில் சரி செய்ய வேண்டும். நிர்மல்குமார் ஆதாரமின்றி எதையும் சொல்லக்கூடாது. கடந்த 60 நாட்களுக்கு மதுரைக்கு தவெக அரசு என்ன செய்துள்ளது? நிர்மல்குமார் பொறுப்பு வகிக்கும் சட்டத்துறையிலேயே பிரச்சனை உள்ளதாக அவரது கட்சிக்காரர் கூறியுள்ளார். நிர்மல்குமார் தனது துறையை விட்டுவிட்டு எல்லா துறைகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

திமுக ஆட்சியில் கோயில் நிலங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கோயிலுக்குச் சொந்தமான 1 சென்ட் நிலத்தைகூட பதிவு செய்யக்கூடாது என பதிவேட்டில் இருக்கும். அதையும் மீறி பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஏன் பதிவு செய்திருக்கிறார்கள்? தெரியாம பத்திரப்பதிவு நடந்துவிட்டது. எதார்த்தமா நடந்ததுனு சொன்னா ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.