📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion May 27, 2026 08:32 PM

2026 குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்:மிருகசீரிடம்,திருவாதிரை, புனர்பூசம், பூசம்.

2026 குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்:மிருகசீரிடம்,திருவாதிரை, புனர்பூசம், பூசம்.

2026 குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்:மிருகசீரிடம்,திருவாதிரை, புனர்பூசம், பூசம்.

திருக்கணிதப் படி, ஜூன்- 2 முதல் (வாக்கியப்படி வரும் மே மாதம் 26-ம் தேதி) கடக ராசியில் அமர்கிறார் குரு. உச்ச குருவாக அருளப்போகும் அவர், மிருக சீரிடம் முதல் பூசம் வரையிலான நட்சத்திரக்காரர்களுக்கு எவ்வித பலன்களைத் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

மிருகசீரிடம்: இந்த நட்சத்திரம் அங்காரக (செவ்வாய்) சாரம் பெற்ற நட்சத்திரம். இதில் பிறந்த நீங்கள், அசாத்தியத் துணிவு உள்ளவர்களாக, எதற்கும் பயப்படாத வர்களாக, திடமான நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

இந்த நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷபம் ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் மிதுனம் ராசியிலும் அமைந்துள்ளன. வரும் குருப்பெயர்ச்சியில் குரு கடக ராசிக்குப் பெயர்கிறார். அதனால் மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்களுக்கு பலன்களில் சிறிய வேறுபாடு கள் இருந்தாலும், மொத்தத்தில் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் செல்வ வரவு ஏற்படும்.

மிருகசீரிடத்தின் அதிபதி செவ்வாய் என்பதால், சில நேரங்களில் மனதில் அமைதியின்மை, எதையோ தேடிக்கொண்டே இருக்கும் உணர்வும் இருக்கும். ஆனால் இந்த குருப்பெயர்ச்சியில் குரு உச்சமான கடகத்தில் அமர்வதால், அந்த அலைபாயும் மனநிலைக் குத் தெளிவு கிடைக்கத் தொடங்கும். எதிர்காலத்துக்கான துல்லிய இலக்கை இனம் காண்பீர்கள்.

ரிஷப ராசியில் வரும் மிருகசீரிட நட்சத்திர அன்பர் களுக்கு முயற்சிகளில் வெற்றி, புதிய தொடர்புகள், தொழிலில் விரிவு, பயணங்கள், தைரியமான முடிவுகள் ஆகியவை அதிகரிக்கும். நீண்ட காலமாக நினைத்த திட்டங்களை இப்போது செயல்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் அல்லது நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கலாம். வியாபாரம், ஆன்லைன் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களுக்கு தாராள பணவரவு, பேச்சுத்திறன், சேமிப்பு ஆகிய விஷயங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த மனவருத்தங் கள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சு மூலம் லாபம் கிடைக்கும் காலமாதலால் ஆசிரியர், பேச்சாளர், மீடியா, ஆலோசகர் போன்ற துறைகளில் இருப்பவர் களுக்கு நல்ல பெயர் கிடைக்கலாம். செவ்வாய் ஆதிக்கம் உள்ள நட்சத்திரம் என்பதால் கோபம், அவசரம், பொறுமையின்மை போன்றவற்றை கட்டுப் படுத்துவது மிகவும் அவசியம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் திருப்புகழ் படித்து முருகப்பெருமானை வணங்கிவாருங்கள். இயன்றால் ஒருமுறை திருச்செந்தூர் சென்று வழிபட்டு வாருங்கள். மேலும், செவ்வாய்க்கிழமைகளில் சிவன் கோயிலில் விளக்கு ஏற்றுவதும் சிறப்பு.

திருவாதிரை: முழுமையாக மிதுன ராசியில் இடம் பெற்றிருக்கும் நட்சத்திரம் இது. ராகுவின் சாரம் பெற்றது. இதில் பிறந்தவர்களிடம் சிறந்த அறிவாற்றலும் பகைவர்களை வெற்றிகொள்ளும் வல்லமையும் உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு. இந்த நட்சத்திரம் முழுவதும் மிதுனம் ராசியில் அமைந்துள்ளது. வரும் குருப்பெயர்ச்சியில் குரு கடக ராசிக்குப் பெயர்கிறார். மிதுன ராசிக்குப் தன ஸ்தான மாக கடகம் அமைவதால் உங்களுக்குப் பணவரவு, குடும்பம், பேச்சுத் திறன், சேமிப்பு மற்றும் வாழ்க்கை நிலைத்தன்மை போன்ற விஷயங்களில் முக்கியமான மாற்றங்களை உருவாக்கும்.

திருவாதிரையின் அதிபதியான ராகு என்பதால், சிற்சில நேரங்களில் உருவாகும் குழப்பமான மனநிலைக்கு, இந்தக் குருப்பெயர்ச்சியில் ஒரு நல்ல முடிவு ஏற்படும். கடந்த சில ஆண்டுகளாக இருந்த மன அழுத்தம் மற்றும் பொருளாதார மந்தநிலை மெதுவாக சீராகத் தொடங்கும். 2-ஆம் வீட்டில் குரு அமர்வது பணவரவு மற்றும் முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கியமானதாக கருதப் படுகிறது. இதனால் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். குடும்பத்தில் இருந்த கருத்துவேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

பரிகாரம்: காலபைரவர் வழிபாடும், தட்சிணாமூர்த்தி அருளும் மிகவும் நல்ல பலன் தரும். ராகுவின் தாக்கத்தைச் சமநிலைப்படுத்த நாகபூஜை அல்லது துர்கை அம்மன் வழிபாடு செய்வதும் சிறப்பாகும்.

புனர்பூசம்: தனகாரகன், புத்திகாரகன், புத்திரக்காரகன், வேதவித்தகன் என்றெல்லாம் குருவின் சாரம் பெற்றுள்ளது இந்த நட்சத்திரம். இதில் பிறந்த நீங்கள், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வீர்கள். உங்களிடம் தெய்விகம் நிறைந்திருக்கும். இரக்கக் குணம் கொண்டிருப்பீர்கள். தன்மானம் மிகுந்தவர்கள்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு. இந்த நட்சத்திரத்தின் முதல் 3 பாதங்கள் மிதுனம் ராசியிலும், நான்காம் பாதம் கடகம் ராசியிலும் அமைந் துள்ளது. வரும் குருப்பெயர்ச்சியில் குரு தன்னுடைய உச்ச ராசியான கடகத்தில் அமர்வது, புனர்பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.

புனர்பூசத்தின் அதிபதி குரு என்பதால், இவர்களுக்கு இயல்பாகவே நல்ல மனம், தர்ம சிந்தனை, ஆன்மிக ஈடுபாடு, பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் போன்றவை அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் மீண்டும் எழுந்து நிற்கும் சக்தியை இந்த நட்சத்திரம் தரும். இப்போது குரு தன் உச்ச நிலையில் அமர்வதால், கடந்த சில ஆண்டுகளாக இருந்த தடை, தாமதம், மனச்சோர்வு போன்றவற்றி லிருந்து விடுபடுவீர்கள்.

மிதுன ராசியைச் சேர்ந்த புனர்பூச அன்பர்களுக்கு பண வரவு, குடும்ப ஒற்றுமை, சேமிப்பு, பேச்சுத் திறன் ஆகியவற்றில் நல்ல முன்னேற் றம் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சிகள் சாதகமாகும். ஆசிரியர், ஆலோசகர், ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர், மீடியா துறையினருக்கு நல்ல பெயரும் மரியாதையும் கிடைக்கும்.

பரிகாரம்: நீங்கள் ஹயக்ரீவரை வணங்குவதால் சுப பலன்கள் உண்டாகும். அதேபோல், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள்; முன்னேற்றம் கிடைக்கும்.

பூசம்: தயவு தாட்சண்யமும் மனசாட்சிக்குப் பயந்து நடப்பதும் உங்களின் சுபாவம். விருந்தோம்பலில் உங்களுக்கு நிகர் யாருமில்லை. நண்பர்களுக்கு முன்னுரிமை தருவீர்கள். பெரிய கூட்டுக் குடும்ப மாக வாழ விரும்புவீர்கள். தளராத தைரியமும் தன்னம்பிக்கையும் இருப்பதால் இருக்கும் இடத்தில், தலைவனாகவே திகழ்வீர்கள்.

இந்த நட்சத்திரம் முழுவதும் கடகம் ராசியில் அமைந்துள்ளது. வரும் குருப்பெயர்ச்சியில் குரு கடக ராசிக்கே பெயர்ந்து உச்ச நிலையை அடைகிறார். அதனால் பூசம் நட்சத்திரத் தாருக்கு இது மிகவும் முக்கியமான குருப்பெயர்ச்சியாக அமைகிறது. பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி. அதனால் பூசம் நட்சத்திர அன்பர்கள் வாழ்க்கையில் எதையும் எளிதாகப் பெறுவதில்லை; ஆனால் தாமதமாக கிடைத்தாலும் நிலையான வெற்றியைப் பெறுவார்கள். மனதில் எப்போதும் குடும்பப் பொறுப்பு, எதிர்காலம், பாதுகாப்பு ஆகிய சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.

இப்போது குரு உச்சமாக ஜன்ம ராசியில் அமர்வதால், சனியின் கடினமான அனுபவங்கள் இனி இலகுவாகும். நிம்மதியும் பாதுகாப்பும் கிடைக்கத் தொடங்கும். கடந்த சில ஆண்டுகளாக மனதில் இருந்த பாரம் மெதுவாக குறையும். இந்தக் காலத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீடு, வாகனம், சொத்து போன்ற விஷயங்களில் நல்ல யோகங்கள் உருவாகலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு அதிகம்.

அதேபோல் இந்தக் குருப்பெயர்ச்சி, தொழில் மற்றும் பணவரவு சார்ந்த விஷயங்களில் மெதுவான ஆனால் உறுதியான முன்னேற்றத்தைத் தரும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிக்கும்.

பரிகாரம்: இந்தக் காலத்தில் தட்சிணாமூர்த்தி வழிபாடும், சனீஸ்வர பகவான் வழிபாடும் அவசியம். வியாழக்கிழமைகளில் மஞ்சள் தானம் செய்வதும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றுவதும் நல்ல பலன்களைப் பெற்றுத் தரும்.