2026 காமன்வெல்த் போட்டிகளில் 2ஆம் நாள் இந்திய வீரர்கள் பங்கேற்கும் முழுமையான போட்டி அட்டவணை
2026 காமன்வெல்த் போட்டிகளில் 2ஆம் நாள் இந்திய வீரர்கள் பங்கேற்கும் முழுமையான போட்டி அட்டவணை
கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் அன்று இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற இந்தியா 2வது நாளில் (ஜூலை 24 வெள்ளிக்கிழமை) பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளது. 2026 காமன்வெல்த் போட்டிகளின் 2வது நாள் அன்று களம் இறங்கும் இந்திய வீரர், வீராங்கனைகளின் முழுமையான போட்டி அட்டவணை விவரங்கள்:
• மாலை 7:30 மணி: பெண்கள் இரட்டையர் பிரிவு (பிரிவு பி, சுற்று 2) - இந்தியா (ரூபா ராணி திர்கி & பிங்கி) vs தென்னாப்பிரிக்கா (தபெலோ முவாங்கோ & ஜாக்கி ஜான்ஸ் வான் ரென்ஸ்பர்க்)
• இரவு 10:20 மணி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு (பிரிவு டி, சுற்று 2) - புதுல் சோனோவால் vs சிசில் அலெக்சாண்டர் (ஃபாக்லேண்ட் தீவுகள்)
• பிற்பகல் 2:30 மணி: ஆண்கள் அணி இறுதிப்போட்டி மற்றும் தனிநபர் தகுதிச் சுற்று (சப்டிவிஷன் 1) - தபேஷ்வரநாத் தாஸ், ஸ்வாதிஷ் கைதேரி புதலத், தபன் மொஹந்தி, யோகேஷ்வர் சிங்
• இரவு 11:00 மணி: ஆண்கள் 55 கிலோ பிரிவு (சுற்று 32) - ஜடுமணி சிங் மாடெங்க்பாம் vs ஆரோன் கலன் (ஸ்காட்லாந்து)
• பிற்பகல் 3:40 மணி: ஆண்கள் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்13 (ஹீட் 1) - புடிகினா • பிற்பகல் 3:56 மணி: ஆண்கள் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் (ஹீட் 4) - ஸ்ரீஹரி நட்ராஜ் • நள்ளிரவு 12:00 மணி: ஆண்கள் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்13 (இறுதிப்போட்டி) - புடிகினா (தகுதி பெறும் பட்சத்தில்) • நள்ளிரவு 12:29 மணி: ஆண்கள் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் (அரையிறுதி) - ஸ்ரீஹரி நட்ராஜ் (தகுதி பெறும் பட்சத்தில்)
• மாலை 5:40 மணி: ஆண்கள் லைட்வெயிட் பிரிவு - அசோக், பரம்ஜீத் குமார் • இரவு 7:24 மணி: பெண்கள் லைட்வெயிட் பிரிவு - ஜஸ்பிரீத் கவுர், சுமன் தேவி • இரவு 10:40 மணி: பெண்கள் ஹெவிவெயிட் பிரிவு - கஸ்தூரி ராஜாமணி • நள்ளிரவு 12:29 மணி: ஆண்கள் ஹெவிவெயிட் பிரிவு - ஜாண்டு குமார், சுதிர்
இந்தப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க விரும்புபவர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தமிழ் சேனலிலும், மொபைல் அல்லது இணையம் மூலம் பார்க்க விரும்புபவர்கள் சோனி லிவ் செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையாகக் கண்டு ரசிக்கலாம்.