📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 07, 2026 02:33 PM

2027 உலகக்கோப்பையில் இருக்கும் சிக்கல்.. உடனே முகமது ஷமியை அணியில் சேருங்க.. பத்ரூதீன் பேச்சு

2027 உலகக்கோப்பையில் இருக்கும் சிக்கல்.. உடனே முகமது ஷமியை அணியில் சேருங்க.. பத்ரூதீன் பேச்சு

2027 உலகக்கோப்பையில் இருக்கும் சிக்கல்.. உடனே முகமது ஷமியை அணியில் சேருங்க.. பத்ரூதீன் பேச்சு

மும்பை: மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை இந்திய அணி தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், அவரது இள வயது பயிற்சியாளர் முகமது பத்ருதீன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் இருக்கும் சிக்கல் ஒன்றை சுட்டிக்காட்டி, அந்த தொடருக்கு அனுபவமிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் தான் தேவை என்பதால் ஷமியை தேர்வு செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.

கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு முகமது ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து ஒருநாள் தொடரிலும் அவர் புறக்கணிக்கப்பட்டார். அதே சமயம் உள்நாட்டுப் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். ரஞ்சி டிராபி தொடரில் 37 விக்கெட்டுகளையும், விஜய் ஹசாரே தொடரில் 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும் ஷமி வீழ்த்தி இருக்கிறார்.

அப்படி இருந்தும் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இங்கிலாந்து தொடரில் அறிமுகமான இளம் வீரர்கள் குர்னூர் பிரார் (3 போட்டிகளில் 61, 67, 97 ரன்கள்) மற்றும் பிரின்ஸ் யாதவ் (79 ரன்கள்) ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர். இங்கிலாந்து போலவே வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் இளம் பந்துவீச்சாளர்களால் எளிதில் சாதிக்க முடியாது என்றும், அங்கு ஷமியின் அனுபவம் தேவை என்றும் பத்ருதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இங்கிலாந்தில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு உதவும் பிட்ச்கள் இருந்தும் இந்திய அணி நன்றாக பந்து வீசவில்லை. ஷமி அங்கு சிறப்பாக பந்து வீசி இருப்பார். தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு ஷமியின் அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. தொடர் புறக்கணிப்புகளுக்கு இடையிலும் ஷமி நேர்மறையான மனநிலையுடன் உள்ளார். ஷமி இன்னும் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். அடுத்த சீசனுக்காக அவர் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நாட்டின் தேவைக்காக விளையாட அவர் எப்போதும் தயாராகவே உள்ளார்" என்று பத்ருதீன் கூறினார்.

மேலும், இந்திய வீரர்களின் தற்போதைய உடற்தகுதி முறை குறித்துப் பேசிய அவர், "தற்போதைய வீரர்கள் ஜிம் மற்றும் உட்புறப் பயிற்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மைதானப் பயிற்சி, ஓடுதல் மற்றும் வேகமாக ஓடுதல் ஆகியவையே முக்கியம். ஜிம் மூலம் உடலை வடிவமைக்கலாமே தவிர, பந்துவீசுவதற்கான ஸ்டாமினாவை வளர்க்க முடியாது" என்று இந்திய அணியின் உடற்தகுதி அணுகுமுறையைக் கடுமையாகச் சாடியுள்ளார்.