26 வருடங்களுக்குப் பிறகு... தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகர்!
26 வருடங்களுக்குப் பிறகு... தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகர்!
கோலிவுட் ஸ்பைடர்
பிகினிக்கு குவியும் லைக்ஸ்!
‘சர்தார் 2’, ‘பாக்கெட் நாவல்’ என டாப் ஹீரோக்களின் படங்களைக் கைவசம் வைத்திருக்கும் மாளவிகா மோகனன், கிடைத்த விடுமுறையில் ரிலாக்ஸ் ட்ரிப்பாக மாலத்தீவுக்குச் சென்று திரும்பியிருக்கிறார். அங்கே கடற்கரையில் பிகினியில் அவர் எடுத்த படங்களை அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, லைக்குகளைக் குவித்துவருகிறார் மாளவிகா.
26 வருடங்களுக்குப் பிறகு... தமிழில் நஸ்ருதின் ஷா!
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் ‘ஓம்’ படத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா இவர்களுடன், மூத்த இந்தி நடிகர் நஸ்ருதின் ஷாவும் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு ‘ஹே ராம்’ படத்தில் காந்தியாக நடித்தவர். கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகிறார். அவர் தொடர்ந்து அரசியல் விமர்சனம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
தள்ளிப்போகிறதா கமல் - அன்பறிவ் படம்?!
கமல் அடுத்ததாக, ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிப்பார் எனப் பேச்சு இருந்தது. ஆனால், இப்போது அதில் சின்ன மாறுதலாம். ‘வீர தீர சூரன்’ எஸ்.யூ.அருண்குமாரின் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கிறார் என்றும், இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டே அன்பறிவ் படத்துக்கு கமல் வருவார் என்றும் தகவல்.
ஷூட்டிங்கை விரைந்து முடிக்கும் மணிரத்னம்!
விஜய் சேதுபதியும், சாய் பல்லவியும் நடிக்கும் மணிரத்னத்தின் படத்தை, குறுகியகாலத் தயாரிப்பாக எடுக்கத் திட்டமிட்டு வேலைகள் நடக்கின்றன. கொல்கத்தா, புதுச்சேரி, சென்னை மூன்று நகரங்களிலும் சேர்த்து 60 நாள்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு இந்த வருடத்துக்குள் படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது.
`காந்தாரா 3’... ரிஷப் ஷெட்டி ஹேப்பி!
‘`நடிகராக இப்போதைக்கு பிஸியாக இருந்தாலும் ‘காந்தாரா 3’-ஐ என்னுடைய டீமோடு இணைந்து தீவிரமாக உருவாக்கிவருகிறேன். இந்தப் படத்தை இயக்குவதில்தான் எனக்கு ஆத்மார்த்தமான மகிழ்ச்சி ஏற்படுகிறது’’ என்று கூறியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. தமிழில் நடிக்கவும் விருப்பத்துடன் இருக்கிறார்.
வில்லனாக வைரல்!
ரவி மோகன் நடிப்பில் உருவான ‘கராத்தே பாபு’ படம் திரையிட ரெடியாக இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் டைரக்டர் பி.வாசுவின் மகன் சக்தி ரீ-என்ட்ரி ஆகிறார். படத்தில் அவர்தான் வில்லனாம். ஏற்கெனவே மலையாளப் படத்தில் வில்லனாக அவர் நடித்த சில காட்சிகள் வைரலாகி கவனத்தைப் பெற்றன. தமிழிலும் அவரது நடிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.