📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 16, 2026 11:34 PM

2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: விராட் கோஹ்லி அரைசதம்

2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: விராட் கோஹ்லி அரைசதம்

கார்டிப்: இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து களமிறங்கியுள்ள இந்தியஅணி 27 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்துள்ளது. விராட் கோஹ்லி அரைசதமடித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் வென்ற இந்தியா, 1-0 என முன்னிலையில் உள்ளது. இன்று கார்டிப், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடக்கிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

துவக்க வீரர் ரோகித் சர்மா 26 , கேப்டன் சுப்மன் கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட்டானார்.

விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து விளையாடி வருகிறார். இந்திய அணி 27 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்துள்ளது. கோஹ்லி 55,ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்றலாம்.

இந்திய அணியில் உடல் நலக்குறைவு காரணமாக கேஎல் ராகுல் நீக்கப்பட்டு உள்ளார். இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

இந்திய அணி விவரம்

வாஷிங்டன் சுந்தர்

அக்சர் படேல்

குர்னூர் பிரார்

ஜஸ்ப்ரீத் பும்ரா

பிரஷித் கிருஷ்ணா

இங்கிலாந்து அணியில் ஜோஸ் டங் மற்றும் லியான் டாவ்சன்நீக்கப்பட்டு குஸ்அட்கின்சன் மற்றும் ஷாகிப் மக்மூத் சேர்க்கப்பட்டு உள்ளனர்

அந்த அணி விவரம்

பென் டக்கெட்

ஜேக்கப் பெத்தேல்

ஜோஸ் பட்லர்

வில் ஜாக்ஸ்

அடில் ரஷீத்

ஜோப்ரா ஆர்ச்சர்

சாகிப் மெக்மூத்

இரு அணிகளும் 111 ஒருநாள் போட்டிகளில் மோதின. இந்தியா 62, இங்கிலாந்து 44ல் வென்றன. 2 போட்டி 'டை' ஆனது. 3 போட்டிக்கு முடிவு இல்லை.

* சோபியா கார்டன்ஸ் ஆடுகளம் 'வேகங்களுக்கு' சாதகமானது. பேட்டர்களும் சாதிக்கலாம்.

* மழைக்கு வாய்ப்பு இல்லை.