📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News May 27, 2026 11:33 PM

3வது டி20: ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்

3வது டி20: ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. நடந்த 2 டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆஹா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. சைம் அயூப் 37 பந்தில் 56 ரன்னும், பாபர் அசாம் 36 பந்தில் 50 ரன்னும் அடித்தனர். ஷதாப் கான் 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக

ஸ்டாய்னிஸ் 23 ரென்னும் கேமரூன் கிரீன் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரை 3-0 என கைப்பற்றி ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது.