📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 11, 2026 08:04 AM

3 கெட்டப் மட்டுமில்லை.. 3 மணி நேரத்துக்கு மேல.. விஷாலின் மகுடம் ரன் டைம் இவ்வளவு நீளமா?

3 கெட்டப் மட்டுமில்லை.. 3 மணி நேரத்துக்கு மேல.. விஷாலின் மகுடம் ரன் டைம் இவ்வளவு நீளமா?

சென்னை: விஷால் இயக்கத்தில் உருவாகியுள்ள மகுடம் திரைப்படம் இந்த வாரம் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் மோதவுள்ள நிலையில், அதன் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

மார்க் ஆண்டனி வெற்றிக்குப் பிறகு புதிதாக விஷாலுக்கு எந்தவொரு வெற்றிப் படமும் இல்லை. கடந்த ஆண்டு பொங்கலுக்கு சர்ப்ரைஸ் வெற்றியாக 12 ஆண்டுகள் வெளியாகாமல் கிடப்பில் கிடந்த மத கஜ ராஜா படம் வெளியாகி மாஸ் காட்டியது.

இந்நிலையில், அதே போல மகுடம் படமும் வெற்றியை கொடுக்குமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தின் ரன் டைம் குறித்த ரிப்போர்ட் வெளியாகி ரசிகர்களை சற்றே ஷாக் ஆக்கியுள்ளது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரன் டைம்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் மட்டுமே ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதைவிட அதிக நேரம் விஷாலின் மகுடம் படம் இந்த வாரம் திரையரங்குகளில் ஓடும் என்பது தெரிய வந்துள்ளது.

மகுடம் ரன் டைம்: விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படமும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த வாரம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 5 நிமிடங்களாம். மகுடம் படத்துக்கும் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பெரிய ரன் டைம் பல படங்களுக்கு சிக்கலாக அமைந்துள்ளது. சில தரமான படங்களுக்கு 3.30 மணி நேர ரன் டைம் கூட மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. துரந்தர் உள்ளிட்ட படங்கள் அதற்கு சாட்சியாக உள்ளது. டாக்ஸிக் திரைப்படமும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் 11 நிமிடங்கள் ரன் டைம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

படம் நல்லா இருந்தா: எந்தவொரு படமும் நல்லா இருந்தா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசிகர்கள் நேரத்தை செலவிட்டு பார்ப்பார்கள். இசை கான்செர்ட்களில் எல்லாம் பல மணி நேரங்களை வரிசையில் நிற்கவே செலவு செய்து வருவதால் மகுடம் படத்திற்கு ரன் டைம் பெரிய பிரச்னையாக இருக்காது. படத்தில் எடிட்டர் தேவையற்ற சீன்களை சரியாக வெட்டித் தூக்கியிருந்தால். என்ன ஆகப்போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.