3 நாட்களில் “இதயம் முரளி” திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
‘இதயம் முரளி’ படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் அதர்வாவுடன் இணைந்து நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
காதல், நகைச்சுவை, எமோஷனல் காட்சிகளால் இப்படத்தின் கதை உருவாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படத்திற்கு டிக்கெட் விற்பனைகள் கணிசமாக அளவில் விற்பனையாகி வருகிறது.
When Madurai fell madly in love with team #IdhayamMurali 🫰A soaring sound from @RitzyCinemas for the team's theatre visit!Stealing hearts successfully, in theatres near you!🎟️ https://t.co/Mw7bvI595S@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran #FahadhFaasil… pic.twitter.com/RrRfe8uSXJ