📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 23, 2026 05:04 PM

$3 பில்லியன் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய ஆடம்பர வீடு ஏலம்

$3 பில்லியன் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய ஆடம்பர வீடு ஏலம்

பணமோசடி வழக்கில் சந்தேக நபராகக் கருதப்படும் சு யோங்சான் என்பவருக்குச் சொந்தமான ‘சவுத் பீச் ரெசிடென்சஸ்’ கட்டடத்தின் 42வது தளத்தில் உள்ள ஆடம்பர பங்களா, புதன்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் 2.30 மணியளவில் $25.3 மில்லியன் என்னும் தொடக்க விலையில் ஏலத்திற்கு வந்தது.

கட்டடக் கலைஞர் நார்மன் ஃபாஸ்டர் என்பவர் வடிவமைத்த அந்தச் சொத்து, இடிசி, எஸ்ஆர்ஐ ஆகிய தரகு நிறுவனங்களால் ஏலம் விடப்படும் தொழிற்சாலை மற்றும் 18 ஆடம்பர வீடுகளுள் ஒன்று.

மேலும், $3 பில்லியன் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய 26 சொத்துகளில் முதற்கட்ட ஏலத்திற்கு வரும் மிகவும் விலைமதிப்பற்ற சொத்தான அந்த பங்களா 6,727 சதுர அடி பரப்பளவுடன் நான்கு படுக்கையறைகளை உள்ளடக்கியது.

2023 ஆகஸ்ட் மாதம் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் முன் சிங்கப்பூரிலிருந்து தப்பிச் சென்ற சு, தம் மீதான ‘இன்டர்போல் நோட்டீஸ்’களை திரும்பப் பெறுவதற்கு ஈடாக, கிட்டத்தட்ட $1.85 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளை ஒப்படைக்க ஒப்புக்கொண்டார்.

முன்னதாக, கடந்த வாரம் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) நைட் ஃபிராங்க் நிறுவனம் நடத்திய ஏலத்தில், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையை எட்டாததால் ஏழு சொத்துகள் ஏலத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டன.

அந்தச் சொத்துகளில் கிரேமர்சி பார்க், ஸ்லோவன் ரெசிடென்சஸ் ஆகிய இடங்களில் உள்ள ஆறு ஆடம்பர வீடுகளும் சண்டெக் டவர் ஒன் அலுவலகமும் அடங்கும்.