📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 16, 2026 09:33 AM

49 பந்தில் 114 ரன்.. புதிய உலக சாதனை படைத்த ஹாரி புரூக்.. சர்வதேச டி20 வரலாற்றில் முதல்முறை

49 பந்தில் 114 ரன்.. புதிய உலக சாதனை படைத்த ஹாரி புரூக்.. சர்வதேச டி20 வரலாற்றில் முதல்முறை

49 பந்தில் 114 ரன்.. புதிய உலக சாதனை படைத்த ஹாரி புரூக்.. சர்வதேச டி20 வரலாற்றில் முதல்முறை

லண்டன்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடி காட்டிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், ஒரே ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக 2 சதங்கள் விளாசிய முதல் முழு உறுப்பு நாட்டு வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

சவுத்தாம்ப்டனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த ஹாரி புரூக் வெறும் 49 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 பிரம்மாண்ட சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 60 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்து பலமான அடித்தளம் அமைத்தது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்திருந்த புரூக், தற்போது 2026-ம் ஆண்டின் தனது 2-வது சர்வதேச டி20 சதத்தைப் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு எஸ்வாதினி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற இணை உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கேப்டன்கள் மட்டுமே ஒரே ஆண்டில் பல சதங்களை அடித்திருந்தனர். ஆனால், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற முன்னணி நாட்டின் கேப்டன் ஒருவர் ஒரே ஆண்டில் 2 டி20 சதங்களை அடிப்பது கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.

சர்வதேச டி20 வரலாற்றில் கேப்டனாக ஒன்றுக்கு மேற்பட்ட சதங்கள் அடித்த முழு உறுப்பு நாட்டு வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா (3 சதங்கள்) மற்றும் பாபர் அசாம் (3 சதங்கள்) ஆகியோருக்கு அடுத்தபடியாக 2 சதங்களுடன் ஹாரி புரூக் இணைந்துள்ளார்.

2026-ம் ஆண்டில் 17 போட்டிகளில் 634 ரன்கள் குவித்துள்ள ஹாரி புரூக், ஒரே காலண்டர் ஆண்டில் அதிக டி20 ரன்கள் குவித்த இங்கிலாந்து கேப்டன் என்ற ஜோஸ் பட்லரின் (462 ரன்கள்) பழைய சாதனையையும் முறியடித்து புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். இவரது இந்த அசாத்திய பேட்டிங் இங்கிலாந்து ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் ஆடிய இலங்கை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து 119 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.