📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 27, 2026 06:31 PM

விளையாட்டு செய்தி// டி.என்.சி.ஏ., 6வது டிவிஷன் லீக் போட்டி காந்தி கிரிக்கெட் கிளப் அணி ‘சாம்பியன்’

Sports

விளையாட்டு செய்தி// டி.என்.சி.ஏ., 6வது டிவிஷன் லீக் போட்டி காந்தி கிரிக்கெட் கிளப் அணி ‘சாம்பியன்’

Google News Tamil Sports

சென்னை: டி.என்.சி.ஏ., ஆறாவது டிவிஷன் லீக் தொடரில், காந்தி கிரிக்கெட் கிளப் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 6வது டிவிஷன் ‘ஏ’ மற்றும் ‘பி’ மண்டல போட்டிகள் நடந்தன.

‘ஏ’ மண்டலத்தில் டி.கே.என்.பாபு கோப்பைக்கான போட்டியில், காந்தி சி.சி., அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று 36 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.

கிராண்ட் பிரிக்ஸ் சி.சி., 9 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 32 புள்ளிகள் பெற்று, 2வது இடத்தைப் பெற்றது.

* ‘பி’ மண்டலத்தில் பி.சி., ராமுடு கோப்பைக்கான போட்டியில், மினர்வா சி.சி., 8 போட்டிகளில் 7 வெற்றி பெற்று 28 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியது. டி.எப்.யு.சி.சி., அணி, 6 வெற்றி மற்றும் ஒரு டை ஆட்டத்துடன் 26 புள்ளிகள் பெற்று 2வது இடத்தைப் பிடித்தது.

பதவி உயர்வுக்கான ‘பிளே ஆப்’ போட்டிகளில், ‘ஏ’ மண்டல சாம்பியனான காந்தி சி.சி., – ‘பி’ மண்டல 2வது அணியான டி.எப்.யு.சி.சி.யை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், ‘ஏ’ மண்டல 2வது அணியான கிராண்ட் பிரிக்ஸ் சி.சி., – ‘பி’ மண்டல சாம்பியனான மினர்வா சி.சி.யை தோற்கடித்தது.

இதனைத் தொடர்ந்து, பி.வி.எச். பாபு கோப்பைக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் போட்டியில் காந்தி சி.சி., மற்றும் கிராண்ட் பிரிக்ஸ் சி.சி. அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய காந்தி சி.சி., வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மேலும், காந்தி சி.சி., – கிராண்ட் பிரிக்ஸ் சி.சி., மினர்வா சி.சி., மற்றும் டி.எப்.யு.சி.சி. ஆகிய நான்கு அணிகள் 5வது டிவிஷனுக்கு பதவி உயர்வு பெற்றன.