📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 08, 2026 08:03 PM

64 பந்தில் 173 ரன்.. வெறியாட்டம் ஆடிய மும்பை இந்தியன்ஸ் வீரர்.. பஞ்சாப் டி20 தொடரில் அதிரடி

64 பந்தில் 173 ரன்.. வெறியாட்டம் ஆடிய மும்பை இந்தியன்ஸ் வீரர்.. பஞ்சாப் டி20 தொடரில் அதிரடி

64 பந்தில் 173 ரன்.. வெறியாட்டம் ஆடிய மும்பை இந்தியன்ஸ் வீரர்.. பஞ்சாப் டி20 தொடரில் அதிரடி

சண்டிகர்: 2026 ஷேர்-இ-பஞ்சாப் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் நமன் தீர் பேட்டிங்கில் வெறியாட்டம் ஆடியுள்ளார். எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 64 பந்துகளில் 173 ரன்கள் குவித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஷேர்-இ-பஞ்சாப் டி20 கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், மொஹாலி கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமிர்தசரஸ் சூர்மாஸ் அணிக்காக நமன் தீர் களம் இறங்கினார். ஆரம்பம் முதலே அசுர வேகத்தில் ரன் குவித்த அவர், வெறும் 19 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். அதோடு நிறுத்தாமல், பந்துகளை சிக்சர் மழையாகப் பொழிந்த நமன் தீர், 39 பந்துகளில் சதம் விளாசி மைதானத்தை அதிரவைத்தார்.

இறுதி வரை மொஹாலி பந்துவீச்சாளர்களை கதறவிட்ட அவர், மொத்தம் 64 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்சர்களுடன் 173 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது இந்த அதிரடி ஆட்டத்தால் அமிர்தசரஸ் சூர்மாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது.

அடுத்து 280 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய மொஹாலி கிங்ஸ் அணியும் வேகமாக ரன் குவித்து போராடியது. அந்த அணியில் ஜஸ்கரன்வீர் பால் 76 ரன்களும், அன்மோல்ப்ரீத் சிங் 52 ரன்களும் எடுத்து அதிரடி காட்டினர். எனினும், அமிர்தசரஸ் அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் மொஹாலி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பேட்டிங்கில் மிரட்டிய நமன் தீர், பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-ரவுண்டராக அசத்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த நமன் தீரின் இந்த ஆட்டம், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.