📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka May 28, 2026 02:31 AM

7 ஆண்டுகள் கடந்தும் இலங்கை தாக்குதலில் தொடரும் நீதிக்கான போராட்டம்!

7 ஆண்டுகள் கடந்தும் இலங்கை தாக்குதலில் தொடரும் நீதிக்கான போராட்டம்!

7 ஆண்டுகள் கடந்தும் இலங்கை தாக்குதலில் தொடரும் நீதிக்கான போராட்டம்!

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று, உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்டங்களின் போது தேவாலயங்களையும், இலங்கையிலுள்ள உணவகங்களையும் இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். நாட்டின் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய மிக மோசமான வன்முறைச் சம்பவமாக இது இன்றும் நீடித்துள்ளது.

இலங்கையில் உயிர்ப்பு பெருவிழாவின்போது இடம்பெற்ற தாக்குதலின் ஏழாவது ஆண்டு நினைவு தினத்தில், உண்மை மற்றும் நீதியைப் பெற்றுத்தருவதில் கத்தோலிக்க திருஅவை உறுதியாக உள்ளது. இப்போராட்டத்தில் கிடைத்துள்ள முன்னேற்றங்களை வரவேற்கும் அதேவேளை, இன்னும் தீர்க்கப்படாமல் உள்ள சவால்களையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

சேனல் 4 (Channel 4) ஊடகம் 2023-இல் வெளியிட்ட ஆவணப்படம், இது தொடர்பான விசாரணைகள் குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்தியுள்ளதுடன், புலனாய்வுத் தகவல்களைக் கையாண்ட விதம் மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை குறித்துப் பல சந்தேகங்களை இது எழுப்பியுள்ளது. ஒரு சில முன்னேற்றங்கள் தென்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி இன்னும் முழுமையடையவில்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

இது தொடர்பாக வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அருள்பணியாளர் ரோஹன் சில்வா அவர்கள், ஒரு சுதந்திரமான சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

மேலும் பலமுறை வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும் இந்தக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், தவறு செய்தவர்கள் பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்த, தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மைய முன்னேற்றங்களில் ஒன்றாக, சுரேஷ் சல்லே (Suresh Sallay) கைது செய்யப்பட்டது ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அதேவேளை, 25 பிரதிதிகள் மற்றும் 23,000-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஒரு வழக்கு தினசரி விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியமளித்து வருகின்றனர்; இது நீதியை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும் என்பது குறிப்பிடத்தக்கது.