உதகை: அவலாஞ்சி வனப்பகுதியில் 8 ஆண்டுகளுக்குப் பின் தென்பட்ட வெள்ளை புலி
அவலாஞ்சி வனப்பகுதி
அதனை கண்டு வியப்படைந்த வனத்துறையினர், அந்த புலிகளை காண்காணிக்க 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தினர். அதில் புகைப்பட கலைஞர் காட்டிய படத்தில், 2 வெள்ளை புலிகள் உள்பட 4 புலிகள் நடந்து செல்வது பதிவாகியிருந்தது.
அதன் பிறகு வெள்ளை புலிகளை கண்காணிக்க வனத்துறையினர் கேமராக்களை தொடர்ந்து பொருத்திய நிலையில், அந்த புலிகள் நடமாட்டம் பதிவாகவில்லை. இதையடுத்து அந்த புலிகள் வேறு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம் என நினைத்திருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2021-ஆண்டு அவலாஞ்சி மின் நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதி அருகே வெள்ளை புலிகள் நடந்து வந்ததாக தகவல் பரவியது. ஆனால், அதனை உறுதிப்படுத்தும் விதமாக எந்த தடயமும் கிடைக்கவில்லை.
கடந்த 2018-ம் ஆண்டு 2 வெள்ளை புலிகள் இருந்த நிலையில், தற்போது ஒரே ஒரு வெள்ளை புலி மட்டும் தென்பட்டுள்ளது. இந்த புலியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள்