📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 02, 2026 02:33 AM

86 லட்சம் ஸ்கூல் ஃபீஸ்.. 40 லட்சம் கேட்டது ஆர்த்திக்கு இல்ல.. ரவி மோகன் மீது EX மாமியார் புகார்

86 லட்சம் ஸ்கூல் ஃபீஸ்.. 40 லட்சம் கேட்டது ஆர்த்திக்கு இல்ல.. ரவி மோகன் மீது EX மாமியார் புகார்

சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கில், ஆர்த்தி கேட்ட ரூ. 40 லட்சம் இடைக்கால ஜீவனாம்சத்தை நிராகரித்து, மாதம் ரூ. 3 லட்சம் வழங்கச் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து ஆர்த்தியின் தாயாரும் பிரபல தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

10 பக்க தீர்ப்பு இருக்கு: அதில், ஆர்த்தி 40 லட்சம் ரூபாய் கேட்டாங்க... ஆனா கோர்ட் 3 லட்சம் தான் கொடுத்துச்சுன்னு சொல்லி நிறைய பேர் தப்பா பேசிட்டு இருக்காங்க. ஆனா, உண்மையிலேயே நீதிமன்றத்திற்கு நான் நன்றி சொல்றேன். ஏன்னா, இது வெறும் 3 லட்சத்தைப் பற்றிய தீர்ப்பு மட்டும் இல்லை... 10 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பு. அதுல எந்த அளவுக்கு எங்களுக்கு சாதகமான விஷயங்கள் வந்துருக்குன்னு யாருக்கும் தெரியாது.

வருஷத்துக்கு 86 லட்சம் ஸ்கூல் ஃபீஸ்: நாங்க ஒட்டுமொத்தமா 40 லட்சம் கேட்கல. ரெண்டு பசங்களும் அமெரிக்கன் ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்க ரெண்டு பேரோட ஸ்கூல் ஃபீஸ் மட்டுமே வருஷத்துக்கு 86 லட்சம் ரூபாய். அந்த ஃபீஸை ரவி தான் கொடுக்கணும்னு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கு, அந்த செய்தி வெளியில் வரல, அதுமட்டுமில்லாம, ஆர்த்திக்கு 3 லட்சம், ரெண்டு பசங்களுக்கும் தலா 1 லட்சம்னு மாசம் 5 லட்சம் பராமரிப்புத் தொகை நீதிமன்றம் கொடுக்க சொல்லியிருக்கு

வீடு ஜப்தி நோட்டீஸ்: கடந்த இரண்டு வருஷமா குழந்தைகளுக்கு சாப்பாட்டுக்கு கூட அவர் காசு கொடுக்கல, சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லையானு கேக்காதீங்க, குழந்தைகளை பராமரிப்பது பெற்றோரின் கடமை. அவரோட கடனைகூட கட்டாம போனதால, ஐசிஐசிஐ வங்கியில இருந்து வீடு ஜப்தி நோட்டீஸ் கொடுத்துட்டு போனாங்க. எந்த பெற்றோருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது. குழந்தைகளோட டியூஷன் ஃபீஸ், கராத்தே, டான்ஸ் கிளாஸ் ஃபீஸ் எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தாதான் அந்த 40 லட்சம் கணக்கு வருதே தவிர, ஆர்த்தி தனக்காக 40 லட்சம் கேட்கவே இல்லை.

நாங்க தடுக்கல: குழந்தைகளைப் பார்க்க ரவியை நாங்க தடுக்கவே இல்லை. அவரே வந்து குழந்தைகளைப் பார்க்கணும்னு சொல்லி போன வருஷமே ஆர்த்தி கோர்ட்ல மனு தாக்கல் செய்து இருக்காங்க. இதுதான் உண்மையான, கோர்ட் என்ன தீர்ப்பு கொடுத்தது என்று தெரியாமல் ஆர்த்தி 40 லட்சம் கேட்டாங்க என்று சொல்வது பொய் என சுஜாதா விஜயகுமார் வேதனையுடன் பேசி உள்ளார்.