📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 27, 2026 12:04 PM

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.1,19,520க்கு விற்பனை

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.1,19,520க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ரூ.1,19,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த இரு நாள் நிலவரம்

சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 15,010 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஓணம் பண்டிகையான நேற்று (ஆகஸ்ட் 26) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இன்றைய நிலவரம்

இந்நிலையில், தங்கம் விலை இன்று ரூ.560 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,19,520க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.14,940க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

3வது நாளாக வெள்ளி

வெள்ளி விலையில் 3வது நாளாக எந்தவித மாற்றமும் இல்லை. கிலோ 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும், கிராம் 265 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.