📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Australia Tamil May 27, 2026 08:32 PM

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய ஈரான் மக்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய ஈரான் மக்களுக்கு தடை

ஈரான் நாட்டவர் சுற்றுலா விசா மூலம் ஆஸ்திரேலியா வருவதற்கு 6 மாத கால தடையை அந்த நாட்டின் அரசு விதித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து ஈரான் நாட்டவர்கள் 7,200 பேர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய சுற்றுலா விசாவுக்கு விண்ணபித்திருந்தனர்.

போர்ப் பதற்றம் மற்றும் நிலையற்ற சூழல் காரணமாக சுற்றுலா விசாவில் வருபவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பாமல் ஆஸ்திரேலியாவிலேயே தங்கிவிடக்கூடும் என்று அந்த நாட்டின் உளவுத்துறைக்கு துப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அடுத்த 6 மாதங்களுக்கு ஈரான் நாட்டவர்களுக்கு விசா அளிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்குள் இருக்கும் ஈரானியர்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.