📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 15, 2026 09:34 AM

“ஆட்சி அதிகாரத்தில் விஜய் ZEROதான்”

“ஆட்சி அதிகாரத்தில் விஜய் ZEROதான்”

“ஆட்சி அதிகாரத்தில் விஜய் ZEROதான்” - பரந்தாமன்

விஜய் ப்ரோ.. நீங்க சினிமாவில் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் ZEROதான் என திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் கூறியுள்ளார்.

நாகர்கோவில் காவல் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன், “அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது "சாரி வேண்டாம் சார்.. எங்களுக்கு நீதி வேண்டும்" என விஜய் சொன்னார். இன்று 'ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என மக்கள் கேட்கின்றனர். நாட்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தைரியமாக பத்திரிகையாளர்களை சந்தித்து பதில் சொல்லுங்கள். த.வெ.கவினருக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா? 200 கிராம் குட்கா வைத்திருந்தவரை தவெக அரசுகொலை செய்துள்ளது. ஆனால் 400 கிலோ குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட விஜயபாஸ்கரை கட்சியில் சேர்த்துள்ளார்கள். தவெக ஆட்சியின் 60 நாட்களில் 4 காவல்துறை மரணங்கள் நிகழ்ந்துள்ளன” என்றார்.