📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 19, 2026 10:00 AM

ஆதார் கார்டில் இலவசமாக இ

ஆதார் கார்டில் இலவசமாக இ

ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ இணைப்பது மற்றும் அப்டேட் செய்வது குறித்து ஒரு முக்கியமான மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கின்றது. UIDAI அறிவிப்பின் படி ஆதார் கார்டில் மின்னஞ்சல் முகவரியை இணைப்பதற்கு புதுப்பிப்பதற்கும் எந்த கட்டணமும் இல்லை. முற்றிலும் இலவசமாக ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ புதுப்பிக்கலாம் என அறிவித்து இருக்கின்றனர். இதற்கு முன்பு ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ புதுப்பிப்பதற்கு அல்லது இணைப்பதற்கு 75 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.ஆனால் தற்போது எந்த ஒரு கட்டணமும் இன்றி இலவசமாக இந்த வேலையை நாம் செய்யலாம். ஆனால் இதற்கு ஒரு கால வரம்பு இருக்கின்றது. மேலும் இந்த இலவச சலுகையை பெறுவதற்கான வழிகள் என்ன ? எப்படி ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ ஆன்லைன் மூலமே புதுப்பிக்கலாம் என்ற வழிமுறைகளை தற்போது தெரிந்துகொள்வோம்ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ புதுப்பிப்பதற்கான காரணம் ?சைபர் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த காலகட்டங்களில் அதனை தடுப்பதற்கே ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ இணைக்கும் முறையை அரசு கொண்டுவந்துள்ளதுஉங்களுடைய ஆதார் கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் e-KYC சரிபார்க்கப்பட்டால் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு பாதுகாப்பு எச்சரிக்கை வரும்புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு PDF ஆக உங்களுடைய இ-மெயில் ID க்கு வரும்UIDAI ஐ தொடர்புகொள்ள அல்லது புகார் வழங்க இந்த இ-மெயில் ID தேவைப்படும் செயலி மூலம் புதுப்பிக்கும் முறைஆதார் கார்டில் இ-மெயில் ID இணைப்பதற்காக நாம் ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் இந்த மாற்றத்தை நாம் மிக எளிதாக செய்யலாம்அதிகாரபூர்வ mAadhaar / Aadhaar செயலியை நாம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்செயலியை திறந்து பாதுகாப்பான முறையில் லாக் இன் செய்துகொள்ளவும்செயலியில் Update Email ID என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்ஆதார் கார்டுடன் இணைக்க விரும்பும் இ-மெயில் ID ஐ உள்ளிடவும். அதன் பின் அந்த இ-மெயில் ID க்கு ஒரு OTP வரும்.அந்த OTP ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்OTP சரிபார்க்கப்பட்டவுடன் மின்னஞ்சல் புதுப்பிப்பு கோரிக்கை ஏற்கப்படும்நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ புதுப்பிப்பது மட்டுமே தற்போதைய இலவசமாகும். 2026 டிசம்பர் 31 வரை இந்த சேவையை இலவசமாக பெறலாம்ஆதார் மையத்திற்கு சென்று பெயர், புகைப்படம் உள்ளிட்ட மாற்றங்களை செய்வதற்கு வழக்கம் போல அதற்கான கட்டணங்களை நாம் செலுத்த வேண்டும். அந்த சேவை இலவசம் கிடையாது