ஏர்டெல் வழங்கும் அதிரடி சலுகைகள் : யாருக்கு எதில் அதிக லாபம் ? 3 புதிய பிளான்களின் ஒப்பீடு
இன்றும் பலர் இன்டர்நெட் பயன்படுத்தாமல் போனை வெறும் பேசுவதற்கும் SMS அனுப்புவதற்கும் மட்டுமே தான் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் இன்டர்நெட் வசதி இல்லாத மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பலர் போனில் இரண்டு SIM வைத்திருக்கின்றனர். அதில் ஒரு SIM மூலம் இன்டர்நெட் பயன்படுத்திவிட்டு மற்றொரு போனை கால் செய்வதற்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்.அப்படி SIM கார்டை போன் கால்களுக்கும் SMS அனுப்புவதற்கு மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தியை ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது. TRAI உத்தரவின் படி இன்டர்நெட் டேட்டா இல்லாத மூன்று பிளான்களை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகைக்கான காரணம் என்ன ? இந்த மூன்று பிளான்களில் யாருக்கு என்ன லாபம் ? என்பதை விரிவாக பார்க்கலாம்புதிய பிளானுக்கான காரணம்இன்று பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகின்றனர். எனவே அனைத்து பிளான்களும் அதிக விலை கொண்ட டேட்டா பேக்குடன் தான் இருக்கின்றது. இதனால் சாதாரண இன்டர்நெட் வசதி இல்லாத மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே தான் டேட்டா இல்லாத வெறும் போன் கால் மற்றும் SMS கொண்ட பேக்குகளை நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டும் என TRAI உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தான் தற்போது ஏர்டெல் நிறுவனம் இந்த மூன்று புதிய பிளான்களை கொண்டுவந்து இருக்கின்றது. இதன் மூலம் சாதாரண மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் ஆண்டிற்கு 2000 ரூபாய் வரை சேமிக்கலாம்ஏர்டெல் புதிய திட்டங்களின் முழு விவரம்ஏர்டெல் வழங்கும் இந்த மூன்று திட்டங்களில் மொபைல் டேட்டா இல்லை. ஆனால் அன்லிமிடெட் கால் மற்றும் SMS அனுப்பும் வசத்தி உண்டு185 ரூபாய் திட்டம்இந்த பிளான் 28 நாட்கள் செல்லுபடியாகும்.300 இலவச SMS -அன்லிமிடெட் கால் வசதிகள்இன்டர்நெட் வசதி இல்லாத keypad போன் பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த பிளானாக இது இருக்கும்203 ரூபாய் திட்டம்இந்த திட்டம் 30 நாட்கள் வரை செல்லும்300 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் கால் வசதிகள்ஒவ்வொரு மாதமும் ரீஜார்ஜ் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற திட்டமாகும்206 ரூபாய் திட்டம்முழு மாத வேலிடிட்டி திட்டம்300 இலவச SMS -அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்அடிக்கடி வேலிடிட்டி முடிவடையும் குழப்பத்தை தவிர்க்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதுஎனவே keypad மொபைல் மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த மூன்று பிளான்களில் உங்களுக்கு ஏற்றது எதுவோ அதை தேர்வு செய்யுங்கள். டேட்டாவிற்காக செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்துங்கள்