📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 26, 2026 03:00 PM

Abhijit Deepke comments on the country's best Chief Ministers

Abhijit Deepke comments on the country's best Chief Ministers

சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் சிறந்த முதல்வர்களில் ஒருவர் எனச் சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ‘ஜென் ஸீ’ கருத்தரங்கில் பங்கேற்ற அபிஜீத் தீப்கேவிடம், இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், தமிழ்நாட்டின் மு.க.ஸ்டாலின், கேரளத்தின் பினராயி விஜயன், டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டைப் பொருளியலிலும் கேரளத்தைச் சுகாதாரத்திலும் டெல்லியைக் கல்வியிலும் சிறந்த மாநிலங்களாக இவர்கள் மாற்றியுள்ளதாக அபிஜீத் தீப்கே பாராட்டினார்.

இதனிடையே, அபிஜீத் தீப்கேவின் இந்த நேர்காணல் கருத்தை பாஜகவின் முன்னாள் நிர்வாகி ஷெஹ்சாத் பூனவாலா கடுமையாக விமர்சித்துள்ளார்.

“அவரது கருத்தின்படி சிறந்த முதல்வர்களாக இருக்கும் இவர்களை மக்கள் நிராகரித்தது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.