அக்., 28க்குள் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியே உத்தரவு
மும்பை: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக அக்.,10ம் தேதி கரப்பான்பூச்சி அமைப்பினர் டில்லியில் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல, மும்பை கிராந்தி மைதானத்தில் நடக்கவிருந்த போராட்டத்தில் ஹிந்தி நடிகர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
அவரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அமர வைக்கப்பட்டிருந்த போட்டோவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
தற்போது, நடிகர் இம்ரான் கானை நாட்டை விட்டு வெளியேறுமறு கூறி, மும்பை போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதால், இந்தியர் அல்லாதவராக கருதப்படுகிறார். குடியேற்றச் சட்டவிதிகளின் படி, வெளிநாட்டவர்கள் இந்தியாவில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அக்.,28ம் தேதிக்குள் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற மும்பை போலீஸ் கெடு விதித்துள்ளது.