📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 27, 2026 08:04 AM

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிய வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவு: முந்தைய ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தவருக்கு லஞ்சம் கொடுத்ததாக பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கும் வகையில் மரிய வில்சன் கல்வி நிறுவனத்தில் என்ன சட்டரீதியான குறைபாடுகள் உள்ளன?

ஒப்புதல்கள் அல்லது அனுமதிகளைப் பெற ஒரு அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8, ஊழல் செயலுக்குத் துணை போனதற்காக பிரிவு 12, சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் வழங்கியதற்காக பி என, எஸ்-இன் பிரிவு 61 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சமரசமின்றி முறையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை, மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும்.