📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 11, 2026 10:01 PM

அமைச்சர் ராஜேஷ்குமார் பங்கேற்ற நிகழ்வில் இரண்டாவதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

அமைச்சர் ராஜேஷ்குமார் பங்கேற்ற நிகழ்வில் இரண்டாவதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

அமைச்சர் ராஜேஷ்குமார் பங்கேற்ற நிகழ்வில் இரண்டாவதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

போதைப்பொருள் என்பது மிகப்பெரிய அளவில் பரவியுள்ளது. அதை தடுத்து நிறுத்த விளையாட்டு தான் முக்கியமான ஒன்று என அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

Published : August 11, 2026 at 7:53 PM IST

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டமன்றத்தில் நேற்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் இன்று பங்கேற்ற நிகழ்ச்சியில் இரண்டாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதுருறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சி கல்லூரியில் விளையாட்டு விழாவை அமைச்சர் ராஜேஷ்குமார் இன்று (ஆகஸ்ட் 11) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலில் கிறிஸ்தவப் பாடல் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக பாடப்பட்டது.

இதையடுத்து, மேடையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், “ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி சார்பாக ஆசியாவில் 1920-ஆம் ஆண்டு உடற்பயிற்சி கல்வியியல் நிறுவனத்தை நிறுவிய ‘பக்’கின் நினைவை போற்றுகின்ற விதமாக 69-வது விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

போதைப்பொருள் என்பது மிகப்பெரிய அளவில் பரவியுள்ளது. அதைத் தடுத்து நிறுத்த விளையாட்டு தான் முக்கியமான ஒரு திருப்பமாக உள்ளது. மாணவர்கள் படிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரத்தை விளையாட்டிற்கு ஒதுக்க வேண்டும். அதில் முழு கவனத்தை செலுத்த வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசியபோது அமைச்சர் ராஜேஷ்குமாரிடம், தொகுதி மறுவரையறை தொடர்பாக தயாநிதி மாறன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், எல்லா கட்சித் தலைவர்களையும் அழைத்து தொகுதி மறுவரையறையை எதிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய மாநில முதலமைச்சர்களை அழைத்து பிரச்சனையை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார். அதை என்னவென்று தயாநிதி மாறன் கூறுகிறார்?” என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “அமைச்சர் மரிய வில்சனின் பேச்சை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வழிபாட்டு முறை என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. அவருடைய வழிபாடு கிறிஸ்தவ வழிபாடு, அதனை அமைச்சர் மரிய வில்சன் சொல்லி இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் அதை திரித்து சொன்னார். அவருடைய உடல் மொழியில் அவர் பேசியிருக்கிறார். கடந்த முறை நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனின் உச்சரிப்பு குற்றம் சொல்ல முடியாது. ஆனாலும் அவரும் இதே மொழியில் தான் பேசினார்” என்று கூறினார்.

மேலும், இன்று ஒய்.எம்.சி.ஏ. கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக பாடப்பட்டது தொடர்பான கேள்விக்கு, “பொது நிறுவனங்கள், அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள ஆகிய இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வரும் கல்லூரி என்பதால் சின்னதாக ஜெபம் செய்தார்கள். அதை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள்” என அமைச்சர் ராஜேஷ்குமார் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து, “நீட் தேர்வை பொருத்தவரை பல கட்ட போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம். நீட் தேர்வை நாங்கள் எதிர்த்து கொண்டு தான் இருக்கிறோம். சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதனை ஆதரித்து இருக்கிறோம். இந்த நீட் தேர்வினால் கிராமப்புற மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். கிட்டத்தட்ட 38 பேர் உயிரை மாய்த்து இருக்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என்று அமைச்சர் ராஜேஷ்குமார் கூறினார்.