📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion May 29, 2026 09:00 PM

அமைச்சருக்காக கடவுள் காத்திருக்க வேண்டாமே; நிர்மல் குமார் வழக்கில் உயர்நீதிமன்றம் காட்டம்

அமைச்சருக்காக கடவுள் காத்திருக்க வேண்டாமே; நிர்மல் குமார் வழக்கில் உயர்நீதிமன்றம் காட்டம்

அமைச்சருக்காக கடவுள் காத்திருக்க வேண்டாமே; நிர்மல் குமார் வழக்கில் உயர்நீதிமன்றம் காட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் மே 15ஆம் தேதி சாமி தரிசனம் செய்தார்.

Published : May 29, 2026 at 4:53 PM IST

சென்னை: எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் மே 15ஆம் தேதி தரிசனம் செய்தார். வழக்கமாக கோவில் நடை மதியம் 12.45 மணிக்கு சாத்தப்படும். ஆனால் அமைச்சருக்காக கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் நிர்மல்குமாரின் தரிசனத்துக்கு பிறகே கோவில் நடை அடைக்கப்பட்டது. அதேபோல, கருவறையில் அமைச்சர் சாமி தரிசனம் செய்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிங்க: கோயம்புத்தூர் சிறுமி வன்கொடுமை வழக்கு - அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்

செய்த தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.வி.பாலசுப்ரமணியம், கோவில் நடை அடைக்கும் முன்பே அமைச்சர் கோவிலுக்குள் நுழைந்துவிட்டார்.

அதற்கு ஆதாரமாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளன. அவரால் மற்ற பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. கோவில் நடை பகல் 1 மணிக்கு தான் அடைக்கப்படும். அமைச்சர் பகல் 12.50 மணிக்கே கோவிலுக்குள் நுழைந்துவிட்டார் என்று விளக்கம் அளித்தார்.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் யாரையும் தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை என்றும், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.