📅 Tuesday, 28 July 2026 IST | ஆடி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 28, 2026 12:33 PM

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோற்றால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லேசான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், தூதரக முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். மிச்சிகன் நோக்கி ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானுடன் நேர்மறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இதில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். "நாங்கள் நல்ல பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம், இதில் ஒரு நல்ல தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி நடக்கவில்லை என்றால், இரண்டு நாட்களுக்கு முன்பு வரை நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோமோ அதை மீண்டும் தொடங்குவோம்" என்று அவர் கூறினார்.

தேர்தல் பிரச்சாரம்

இதனைத் தொடர்ந்து மிச்சிகனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப், தனது பேச்சின் தொனியை மேலும் தீவிரப்படுத்தினார்.

"ஈரானை லஞ்சம் கொடுத்து வாங்க முடியாது, அவர்களைத் தோற்கடிக்கத்தான் வேண்டும். நாங்கள் அவர்களைக் கடுமையாக வீழ்த்துவோம்" என்று குறிப்பிட்ட அவர், அதேவேளையில் தற்போது சுமூகமான முறையில் பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹார்முஸ் நீரிணை

டிரம்பின் கூற்றுக்கு மாறாக, அமெரிக்காவுடன் நேரடியாக எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரானிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகே மறுத்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நீண்டகால ராணுவ நடவடிக்கை அந்நாட்டின் ஆயுதக் இருப்பைக் குறைத்து வருவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கப் படைகளிடம் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.