📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 18, 2026 09:33 PM

அமரன், ராயன், மகாராஜா... தேசிய விருதுகள் அள்ளிய தமிழ்ப் படங்கள்!

அமரன், ராயன், மகாராஜா... தேசிய விருதுகள் அள்ளிய தமிழ்ப் படங்கள்!

சென்னை: 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு, 2024-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

‘அமரன்’ படத்துக்காக ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது, ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ‘சூரரைப் போற்று’, ‘வாத்தி’ படங்களுக்காக ஜி.வி.பிரகாஷ் தேசிய விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதை ‘அமரன்’ திரைப்படத்துக்காக கலைவாணன் வென்றுள்ளார்.

‘அமரன்’ திரைப்படம் வெளியானபோது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது நினைவுகூரத்தக்கது.

தமிழ்த் திரைப்படங்களில் ‘மகாராஜா’ படத்துக்காக அனல் அரசு-க்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த உறுதுணை நடிகைக்கான விருது ‘மகாராஜா’ படத்தில் நடித்த சச்சனா நமிதாஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவர் ‘மித்யா’ கன்னடப் படத்தில் நடித்த ரோபஸ்ரீ வர்கடி உடன் பகிர்ந்து கொள்கிறார்.

சிறந்த சமூக அக்கறையுடனான படைப்புக்கான தேசிய விருது, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தின் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மெய்யழகன்’ படத்துக்கு சிறந்த ஒலிக்கலவைக்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘புஷ்பா 2’ படத்துக்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது தீபாலி நூர், ஷீத்தல் சர்மாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

’பிரம்மயுகம்’ படத்தில் நடித்த நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சந்து சாம்பியன்’ படத்துக்காக கார்த்திக் ஆர்யனுக்கும் சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆர்ட்டிகிள் 370’ படத்தில் நடித்த யாமி குப்தாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கல்கி 2989 ஏடி’ படத்துக்கு சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.