📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 27, 2026 04:30 PM

அனைத்துலக விருது பெற்ற ஒன்பது வயது நடிகை

அனைத்துலக விருது பெற்ற ஒன்பது வயது நடிகை

‘மலேசிய கோல்டன் குளோப் அவார்ட்ஸ்’ (Malaysia Golden Global Awards) விருது நிகழ்ச்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒன்பது வயது ஓங் சுவான் ஜிங் எனும் சிறுமி சிறந்த நடிகை விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (ஜூலை 25) ஒன்பதாவது மலேசிய அனைத்துலகத் திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியின்போது அந்த விருது வழங்கப்பட்டது.

இது, தொடக்கநிலை நான்கு மாணவியான ஓங் சுவான் ஜிங் இவ்வாண்டு வென்றுள்ள இரண்டாவது அனைத்துலக நடிகை விருதாகும். இவ்வாண்டு வெளியான ‘ஆ கர்ல்’ எனும் படத்துக்காக அவர் இந்த இரண்டு விருதுகளையும் வென்றிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 50வது ஹாங்காங் அனைத்துலகத் திரைப்பட விழாவில் ‘சீன மொழி இளம் திரைப்படப் போட்டி’யில் (Chinese-language Young Cinema Competition) சிறந்த நடிகைக்கான ஃபையர்பெர்ட் விருதை சுவான் ஜிங் வென்றார். தன்னுடன் போட்டியிட்ட பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி அவர் வெற்றிபெற்றதாக சாவ்பாவ் தெரிவித்தது.

ஹாங்காங் அனைத்துலகத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருதைத் தட்டிச் சென்ற ஆக இளம் நடிகை என்ற பெருமையும் அவரைச் சேரும்.

‘ஆ கர்ல்’ திரைப்படம் எடுக்கப்பட்டபோது சுவான் ஜிங்குக்கு வயது ஏழு.