📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 15, 2026 02:03 PM

அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!

நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்! என்று கூறியுள்ளார்.

நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தையொட்டி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!

அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.