📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 08:04 PM

அனிருத்துக்கு மனைவி ஆகும் காவ்யா மாறன்.. அப்போவே கணிச்சிருக்காங்களே பாஸ்.. அப்படியே நடந்துடுச்சே

அனிருத்துக்கு மனைவி ஆகும் காவ்யா மாறன்.. அப்போவே கணிச்சிருக்காங்களே பாஸ்.. அப்படியே நடந்துடுச்சே

சென்னை: அனிருத்துக்கும், காவ்யா மாறனுக்கும் நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடக்கவிருக்கிறது. அதனை முடித்துவிட்டு 21ஆம் தேதி சென்னையில் பிரமாண்ட ரிசப்ஷனும் நடக்கிறது. திருமண தேதி நெருங்கிவிட்டதால் வேலைகள் எல்லாம் சூடுபிடித்திருக்கின்றன. இன்று முதலமைச்சர் விஜய்க்கு கலாநிதி மாறன், அனிருத் உள்ளிட்டோர் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்கள்.

அனிருத் திரைத்துறைக்குள் வந்த புதிதில் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்தார். சில வருடங்கள் தீவிரமாக காதலித்த அவர்கள்; திடீரென பிரிந்துவிட்டார்கள். அந்தப் பிரிவுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்; அதற்கு பிறகு அதுகுறித்து இரண்டு பேருமே வாய் திறக்கவில்லை. மூவ் ஆன் ஆகி அடுத்தடுத்த வேலைகளில் பிஸியானார்கள். அப்படி அனிருத் செம பிஸியாகிவிட்டார். தென்னிந்திய சினிமாவிலேயே இப்போது அவர் டாப் இசையமைப்பாளராக ஜொலித்துவருவது குறிப்பிடத்தக்கது.

காவ்யா மாறனுடன் திருமணம்: சூழல் இப்படி இருக்க பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யாவுக்கும், அனிருத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பேரும் முதலில் காதலித்ததாகவும்; பிறகு வீட்டு சம்மதம் கிடைத்ததாகவும் தெரிகிறது. அனி - காவ்யா காதலை கேள்விப்பட ரசிகர்கள் ஆச்சரியமும் பட்டிருக்கிறார்கள். இவர்களுக்குள் எப்படி கனெக்‌ஷன் ஆனது என்று கமெண்ட்ஸையும் பார்க்க முடிகிறது.

கிரீஸில் திருமணம்: இந்தத் தம்பதியின் திருமணம் கிரீஸ் நாட்டில் நவம்பர் 11ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதில் இரண்டு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அவர்களை தனி விமானத்தில் அழைத்து செல்லவிருக்கிறார்களாம். திருமணத்துக்கு பிறகு 21ஆம் தேதி சென்னையில் ரிசப்ஷன் நடக்கவிருக்கிறது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் அனிருத்தின் த்ரோபேக் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு தனியார் சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அனிருத். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு ஜோதிடம் சொல்லும் ஒரு பெண்ணும் வந்திருந்தார். அந்தப் பெண் அனியின் திருமணம் குறித்து பேசுகையில், "அனிருத்தின் அப்பா யாரை ஓகே சொல்கிறாரோ அவரைத்தான் அனிருத் திருமணம் செய்துகொள்வார்.

அவருக்கு காதல் திருமணம்தான் நடக்கும். காதல் செய்துவிட்டு அப்பாவிடம் சென்று சம்மதம் வாங்குவார். அனிருத்துக்கு வரும் மனைவி சினிமா துறையில் இருக்கமாட்டார். நிறைய படித்தவராக இருப்பார். டெலி கம்யூனிகேஷன், பிராட்காஸ்ட்டிங் துறையிலிருந்து அந்தப் பெண் வருவார். அனிருத் வீட்டிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டருக்குள்தான் அந்தப் பெண் இருப்பார்" என்றிருந்தார். அந்தப் பெண் சொன்ன அத்தனையும் அனிருத்துக்கு மனைவியாகப்போகும் காவ்யா விஷயத்தில் பொருந்திப்போவது குறிப்பிடத்தக்கது.