Politics
June 08, 2026 07:00 AM
அண்ணாமலை கட்சி பாஜகவின் மறுபிறப்பு: முத்தரசன் விமர்சனம்
திருவாரூர்: அண்ணாமலை தொடங்கும் கட்சி, பாஜகவின் மறுபிறப்புதான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டால்தான் டெல்டாவில் 4.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய முடியும். மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி கொடுக்க மாட்டோம் என்பதை மத்திய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். அண்ணாமலை தொடங்கும் கட்சி, பாஜகவின் மறுபிறப்புதான். பாஜகவில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறிதான் அவரது இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
Politics