அண்ணாமலைக்கு வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது
பா.ஜனதா கட்சியில் இருந்து விலகிய அண்ணாமலை புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார். அண்ணாமலையின் புதிய கட்சியில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், அண்ணாமலையில் புதிய கட்சி குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
அண்ணாமலைக்கு வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது. அண்ணாமலை வந்ததால் பா.ஜ.க பலமடையவும் இல்லை; அவர் வெளியே சென்றதால் பலவீனம் அடையவும் இல்லை. அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள்; பொதுநலவாதிகள் பா.ஜ.க.விலேயே தொடருகின்றனர். தாமரையில் இருந்து ஒரு இதழை கூட யாராலையும் அசைக்க முடியாது.
கட்சியை விட்டுச் சென்றவர்களுக்கு ஆதரவும் கிடையாது; வாழ்த்தும் கிடையாது. புதிய இயக்கத்தில் லட்சம் பேர் இணைகிறார்கள் என்பது எங்களுக்கு பொருட்டல்ல; லட்சியவாதிகள் எங்களுடன் இருக்கின்றனர். வேறு முகத்தைக் காண்பித்து பா.ஜ.கவுக்கு மாற்று சக்தியைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.