Politics
September 29, 2026 05:02 PM
அன்றாடம் போட்டி போட்டு கொண்டு உயரும் உணவுகளின் விலையும், கொலையும்.! கனிமொழி விமர்சனம்!
அன்றாடம் போட்டி போட்டு கொண்டு உயரும் உணவுகளின் விலையும், கொலையும்.! கனிமொழி விமர்சனம்!
சென்னை: ஐஸ் ஹவுஸ் பகுதியில் அஜித் என்ற இளைஞர், தனது பெற்றோரின் கண் முன்னே வீட்டு வாசலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக எம் பி கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலையும், கொலைச் சம்பவங்களும் தான் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றன.
முதலமைச்சர் விஜய், திமுகவை விமர்சிப்பதற்கான ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை, தன்வசம் உள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதிலும் கொஞ்சம் காட்டியிருந்தால்கூட இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். இனியாவது செய்வாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Politics