📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 22, 2026 12:05 AM

அப்பா, அம்மா அப்படி இல்லை.. தயக்கமாக இருக்கும்.. விஜய், சங்கீதா பற்றி ஜேசன் சஞ்சய் ஓபன்

அப்பா, அம்மா அப்படி இல்லை.. தயக்கமாக இருக்கும்.. விஜய், சங்கீதா பற்றி ஜேசன் சஞ்சய் ஓபன்

சென்னை: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிக்மா திரைப்படம் 28ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. முதலில் போன மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டியது. ஆனால் ஜனநாயகன் வந்ததால் தள்ளிப்போனது. படத்தின் ரிலீஸுக்கு சில நாட்கள் மட்டுமே இருப்பதால்; ப்ரோமோஷன் பணிகளில் மும்முரம் காட்டிவருகிறார் ஜேசன் சஞ்சய். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தனது தாய், தந்தை குறித்து பேசியிருக்கிறார்.

நடிகரும், முதலமைச்சருமான விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் இருக்கிறார். அவர் வெளிநாட்டில் இயக்கம் தொடர்பான படிப்பை படித்துவிட்டு; இப்போது லைகா தயாரிப்பில் சிக்மா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் சம்பத், ராஜூ சுந்தரம் உள்ளிட்டோரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். தமன் இசையமைத்திருக்கிறார். விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் நேரத்தில் அவரது மகனின் படம் வருவதை எமோஷனலாகவும், தொடர்ச்சியாகவும் பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

ரிலீஸ் எப்போது?: படத்தின் அனைத்து வேலைகளும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.முதலில் போன மாதமே ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் விஜய்யின் ஜனநாயகன் வந்ததால் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது ஆகஸ்ட் 28ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாகியிருக்கின்றன. ஜேசன் சஞ்சய்யும் பல யூடியூப் சேனல்களுக்கு எந்தவித கெடுபிடியும் இல்லாமல் கேஷுவலாக பேட்டிகள் கொடுத்துவருகிறார்.

சமீபத்திய பேட்டி: அந்தவகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு இப்போது பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "எப்போதுமே படத்தில் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். அந்த ஜானர் அதற்கு ஒத்துழைத்தால், நான் யாரோ அந்த கேரக்டராகவே இயல்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். கேமராவுக்கு முன்பு மட்டுமில்லாமல் நான் ரிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறேனோ அப்படியே திரையிலும் காட்ட விரும்புகிறேன்" என்றார். அதனைத் தொடர்ந்து தனது தாய், தந்தை குறித்தும் பேசினார்.

அப்பா, அம்மா பற்றி: அப்போது அவர், "எனது வாழ்க்கையின் பெரிய தூணே எனது அம்மாதான். 24/7 என்னை பற்றியும், எனது சகோதரி பற்றியுமே நினைத்துக்கொண்டிருப்பார். நான் ஒருநாள் அவருக்கு ஃபோன் செய்ய மறந்துவிட்டால், அவரே எனக்கு ஃபோன் செய்து, 'இன்று என்ன நடந்தது? எப்படி இருக்கிறாய்?' என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பார். எனது அப்பா, அம்மாவிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள எனக்கு தயக்கமாகத்தான் இருக்கும். அவர்கள் அந்த அளவுக்கு எனக்கு இடம் கொடுக்கவில்லை.

வழக்கு வாபஸ்: ஆனால் எனது சகோதரியிடம் மட்டும் என்னுடைய எல்லா விஷயங்களையும் மனம் திறந்து பேசுவேன்" என்றார். முன்னதாக, விஜய் - சங்கீதா விவாகரத்து சில வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கீதா தான் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுவிட்டார். எனவே அவர்கள் மீண்டும் இணையப்போகிறார்கள் என சந்தோஷப்பட்டார்கள் ரசிகர்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத விதமாக; ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் கொடியேற்றியபோது சங்கீதா வரவில்லை; திரிஷாதான் வந்திருந்தார். இதனால் அவர்கள் விஷயத்தில் என்னதான் நடக்குதோ என குழம்புகிறார்கள் ரசிகர்கள்.