📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 01, 2026 04:30 PM

"அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம்..."

"அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம்..."

"அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம்..."- மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

தமிழ்நாட்டின் உட்சபட்ச நடிகராக இருந்தநிலையில், அரசியலில் இறங்கி மக்களின் நலனுக்காக தனது "கரியரின் உச்சத்தை விட்டுவந்திருக்கேன் " என்று மேடைக்கு மேடை பேசிய முதலமைச்சர் விஜயின் மகன் 'ஜேசன் சஞ்சய்', தந்தை மீண்டும் சினிமாவுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று விருப்பம் காட்டியுள்ளார்.

முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான 'சிக்மா' இயக்கி முடித்த நிலையில், அதன் புரொமோஷனுக்காக தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் " ஹாலிவுட்டில் உச்ச நடிகரான ஜேசன் ஸ்டாதம் உடன் இணையாக நடிப்பதற்கு தனது தந்தையை அழைத்து செல்வேன்" என்றும் "அப்பாவும் கோட்சூட், ஜேசன் ஸ்டாதமும் கோட்சூட் என இருவரும் நடிக்கையில் நிச்சயம் நன்றாக இருக்கும், இந்த பேட்டியை ஸ்டாதம் பார்க்கவேண்டும்"என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜேசன் சஞ்சயின் முதல் படத்தை 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், "தந்தையின் 'கத்தி' படத்தையும் லைகா தயாரித்தது, என் முதல் படத்தையும் லைகா தயாரித்துள்ளது" என தயாரிப்பு நிறுவனத்துடன் அவருக்கு எமோஷனல் கனக்ட்சன் இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, 'நான் கதை கூற செல்கையில் ஸ்கிரிப்டை படித்துவிட்டு நன்றாக இருக்கிறது, சில மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள் என்று கூறுவார்கள், என எதிர்பார்த்தேன். ஆனால், இந்த கதையை படமாக நானே தயாரிக்கிறேன் என்று கூறியதும் மகிழ்வுடன் கூடிய பெரும்பொறுப்பும் இருப்பதை நான் உணர்ந்தேன்" என நெகிழ்வுடன் கூறினார்.

'தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் மகன் எதற்காக நடிப்பை விட்டுவிட்டு டைரக்க்ஷனை தேர்ந்தெடுத்தீர்கள்' என்ற கேள்விக்கு அவர் 'என் சிறுவயதிலிருந்து பல ஆசைகள் இருந்தது. குறிப்பாக, 'பைலட் ' ஆகவேண்டும் என்றும், 'கிரிக்கெட்டர்' ஆகவேண்டும் என்றும் ஆசைகள் இருந்தன, ஆனால் பள்ளிப்படிப்பு முடியும் நேரத்தில்தான் சிறுவயதில் சூட்டிங்கிற்கு அதிகம் சென்ற நான் சினிமாவின் மேல் உள்ள ஆர்வத்தை உணர்ந்தேன். அதன்பின் கனடாவில் உள்ள டொராண்டோ ஃபிலிம் ஸ்கூல் சென்று திரைப்படப் பயிற்சி பயின்றேன். அப்போதுதான் எனக்குள் இருக்கும் கதை சொல்லும் ஆர்வம் என்னை இயக்குனர் ஆகவேண்டும் என்ற பாதையை தேர்ந்தெடுக்கவைத்தது." என்று பதிலளித்தார்.

சஞ்சயின் சினிமா பாதையை அவராகவே முடிவெடுத்ததாகவும், அதில் தந்தையின் எந்த ஒரு அறிவுரைகளும் இல்லை எனவும் கூறியுள்ளார். அவர் பள்ளி படிப்பின்போது மலையாள இயக்குனர் 'அல்போன்ஸ் புத்திரன்' ஜேசன் சஞ்சய்-க்கு கதை வைத்திருப்பதாக விஜயை அணுகியபோது, விஜய் அவர்கள் மகனிடமே முடிவை ஒப்படைத்ததாக விஜய் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த நிலையில் அவர் மகன் சஞ்சையும் ஆம் என்று தலையசைத்துள்ளார்.

மேலும், தந்தையின் அரசியல் பாதையின் மேல் உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு ஜேசன் சஞ்சய் மௌனம் காத்துள்ளதாகவும், ஜேசன் சஞ்சய்க்கு தந்தையின் அரசியல் வருகை பிடிக்கவில்லை என்றும் தனது தந்தையை வைத்து ஹாலிவுட் தரத்தில் ஒரு படம் இயக்கவேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருப்பதாக சினிமா விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர் .