அரசியலுக்கு புதிது என்றாலும் விஜய் துணிச்சலான தலைவர்: டிகே சிவக்குமார் கருத்து
பெங்களூர் வருவதாக கூறிய தமிழக முதல் அமைச்சர் விஜய்யின் துணிச்சலான முடிவை நான் பாராட்டுகிறேன். ஆனால், ஒரு சுமூகமான சூழலில் நாம் சந்திப்பதே சிறந்தது என்று நான் கேட்டுக்கொண்டேன். இதனால் அவர் தனது பயணத்தை ஒத்திவைத்தார். ஏனென்றால் எனது நண்பர்களுக்கு எதிராக யாரும் முழக்கமிடுவதை நான் விரும்பவில்லை' என்று கர்நாடகா முதல் டிகே சிவக்குமார் கூறினார். முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறுகையில், 'தமிழக முதல்-அமைச்சர் விஜய் 3-ந் தேதி(இன்று) பேச்சுசவார்த்தைக்கு வர இருந்தார்.
துணிச்சலான தலைவர்
ஆனால் நிலைமை சரி இல்லாததால் ஒத்திவைக்க கோரினேன். அவர் ஏற்று தனது பயணத்தை ஒத்தி வைத்தார். விஜய் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் புதிய அரசியல்வாதியாக இருந்தாலும், துணிச்சலலான தலைவர். அவர் எடுத்த துணிச்சலான முடிவை கண்டு அவருக்கு வாழ்த்து கூறினேன். எங்களின் அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் சரி, அவர் கர்நாடகம் வர விரும்பினார்.
ஒற்றுமையாக வாழவேண்டும்