📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 13, 2026 08:01 PM

அரசு அதிகாரத்தில் பங்கு.....வன்னியரசு

அரசு அதிகாரத்தில் பங்கு.....வன்னியரசு

அரசு அதிகாரத்தில் பங்கு.....வன்னியரசு-சிந்தனைச்செல்வன் இடையே வெடித்த மோதல்?

தவெக ஆட்சியில் விசிகவுக்கு வழங்கப்பட்ட அதிகாரப் பங்கு தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், புதிய பதவில் விசிக பிரமுகர் சிந்தனைச்செல்வனை நியமிக்க முயற்சி நடப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலில் தவெக 118 தொகுதிகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி பிடித்தது. ஆனால், பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேட்ட நிலையில், இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைத்து முதலமைச்சரானார்.

இந்நிலையில், ஆதரவு கோரிய விசிக, அதிகாரத்தில் பங்கு மற்றும் ஆட்சியிலும் பங்கு என்பது நீண்ட காலமாகக் கோரி வரும் நிலையில், தவெக ஆட்சி அமைத்து பொறுப்பேற்ற பிறகு, அதிகாரத்தில் பங்கு என்ற அடிப்படையில் விசிக தரப்பினருக்கும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, சமூகநீதி துறை அமைச்சராக வன்னியரசு தேர்வு செய்யப்பட்டு, தற்போது அமைச்சராக இருந்து வரும் நிலையில், தற்போது அவருடைய பலத்தைப் பயன்படுத்தி அடுத்த தலைவரையும் தங்கள் தரப்பில் கொண்டுவர முயற்சி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய அரசியல் தலைவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிந்தனைச்செல்வன். விசிகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இவர், தமிழக அரசியலில் நீண்டகாலமாக சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் செயற்பாட்டாளர் மற்றும் பேச்சாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், “அதிகாரத்தில் பங்கு கேட்டு வந்தவர்களும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்களாமே?” “பட்டியல், பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாக்க 2021ல் ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம்’ உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த தமிழ்வாணன் காலமாகிவிட, அந்தப் பதவியில் முன்னாள் எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வனை அமர்த்துவதற்கு காய் நகர்த்துகிறார் துறை அமைச்சரான வன்னியரசு.

தவிர, ஆணையத்தின் உறுப்பினர்களையும் கூண்டோடு ராஜினாமா செய்யச் சொல்லி பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதற்கு உறுப்பினர்கள் மறுப்பு தெரிவிக்கவே, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் தமது திட்டத்தைச் சாதித்துக்கொள்ள, ‘ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதிதான் நியமிக்கப்படுவார்’ என்ற ஆணையைத் திருத்தி, விசிக கட்சிப் பிரமுகரை நியமித்தால், ஆணையத்தின் மீது மதிப்பு குறைந்துவிடும் என அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளே அச்சம் தெரிவிக்கிறார்கள்.” என்று இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.