அரசு பள்ளிகளில் ஏஐ கல்வி: சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
சென்னை: அரசு பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி கற்பிக்கப்படும். மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
சட்டசபையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிவிப்புகள்:
* தமிழ்நாடு அறிவு பாடத்திட்டம் அறிமுகம்
* வாசிப்பை நேசிப்போம்; அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் நாளிதழ்கள் வழங்கப்படும்
* ஓடி விளையாடு; தினமும் விளையாட்டு பாட வகுப்பு நடத்தப்படும்
* மாணவர்களுக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கப்படும்
* 2 முதல் 9 வரை திறன் பிளஸ் விரிவுப்படுத்தப்படும்
* அரசு பள்ளிகளி்ல 6 ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி
* புத்தகப்பைக்கு முடிவு கட்டும் 'மகிழ்வுடன் முன்னேறு' திட்டம்
* மாணவர்களின் திறனை உறுதி செய்ய 10.5 லட்சம் பேருக்கு திறன் பிளஸ் திட்டம்
*மாணவர் தனித்துவமான கற்றலை வலுப்படுத்த தன்னிலை கற்றல் திட்டம்
*பள்ளிகளில் கல்வித்துறையில் காலியாக உள்ள சி மற்றும் டி பிரிவில் 358 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்
*ஒவ்வொரு நாளும் விளையாட்டு வகுப்புகள்
*500 பள்ளிகளில் 68 மாணவர்களுக்கு ஏஐ சார்ந்த தமிழ்நாடு தன்னிலை கற்றல் திட்டம்
*2 ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்துள்ளவர்களின் குழந்தைகளுக்கு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச கல்வி
*மாதத்தில் ஒரு நாள் புத்தக பை இல்லா நாள்
*முதல்வரின் பெருங்கனவு - மீண்டும் உலகத் தமிழர் மாநாடு நடத்த ஆலோசனை
*கணினியில் தமிழ் வளர்க்கும் இருவருக்கு இணைய தமிழ் செம்மல் விருது இருவருக்கு வழங்கப்படும்
*அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க கூடுதலாக 5.75 கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும்.
*பாரதிராஜாவின் சாதனைகளை போற்றி 2.50 கோடி ரூபாயில் தேனியில் திருஉருவ சிலை உடன் மணிமண்டபம் அமைக்கப்படும்.
* வேலு நாச்சியார், ஈவெரா, அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், காமராஜருக்கு சென்னையில் கோட்டம்
*சென்னையில் கழிவு நீரில் இருந்து அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு தயாரிக்கப்படும்.
*பாதாள சாக்கடை திட்டம் இயந்திரமயமாக்கப்படும்.
* 1லட்சம் எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்படும்