அட கடவுளே.. ஷூட்டிங்கில் தொண்டையில் சிக்கிய மூக்குத்தி.. மூச்சுவிட முடியாமல் திணறிய நடிகை!
சென்னை: பொதுவாக சினிமா படப்பிடிப்பின் போது ஃபையர் ஆக்சிடென்ட், கார் சேஸிங் விபத்து, ஃபைட் மாஸ்டர்கள் அடிபடுவது, ஹீரோவிற்கு கை அல்லது காலில் அடிபடுவது என விதவிதமான விபத்துகள் நடந்து தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைக்கு செட்டில் அனைவரும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறையும் வகையில் ஒரு விசித்திரமான விபத்து நடந்துள்ளது.
பாடகியும் நடிகையுமான ஷெஹ்னாஸ் கில் தற்போது 'இஷ்க்னாமா' என்ற படத்தில் நடித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் இந்த காலத்தில் ராணிக்கள் பயன்படுத்தும் உடை மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு படத்தின் ஒரு காட்சியில் ஓடி வரும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியை எடுத்துக்கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக நடிகை மூக்கில் அணிந்திருந்த 'மூக்குத்தி' திடீரெனக் கழன்று, ஓடும் வேகத்தில் அப்படியே அவரது வாய்க்குள்ளும் விழுந்து தொண்டை பகுதிக்கும் சென்றுவிட்டது.
தொண்டையில் சிக்கி மூக்குத்தி: திடீரென மூக்குத்தி வாய்க்குள் சென்றதால் மூச்சு விட முடியாமல் தணறிய நடிகை ஷெஹ்னாஸ் கில், பயங்கரமாக இரும தொடங்கினார். படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் உறைந்து நிற்க, அருகில் இருந்த சக நடிகர் சௌரப் சச்தேவா என்ன ஆச்சு என்று கேட்க அதற்கும் பதில் சொல்ல முடியாமல் நடிகை இருமத் தொடங்கினார். உடனடியாக ஓடிவந்த நடிகர், ஷெஹ்னாஸின் முதுகில் தட்டி அந்த மூக்குத்தியை வெளியே எடுக்க உதவி செய்தார். இதனால் அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் பதறிப்போனார்கள், பின் ஒருவழியாக மூக்குத்தி வெளியே வந்துவிட்டது.
அட கடவுளே: இந்த வீடியோவை நடிகை ஷெஹ்னாஸ் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, நிறைய பேர் என்கிட்ட அந்த 'மூக்குத்தி விபத்து' எப்படி நடந்தது என கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அந்த நலம் விரும்புகளுக்காக இந்த வீடியோ என பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், அட கடவுளே என்றும், நல்லவேளை பெரிய ஆபத்து எதுவும் ஆகல என்றும், உடம்பைப் பத்திரமா பார்த்துக்கோங்க ஷெஹ்னாஸ், படப்பிடிப்பில் கவனமாக இருக்க வேண்டுமென அக்கறையுடனும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது நடிகை பகிர்ந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
A post shared by Shehnaaz Gill (@shehnaazgill)