📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 27, 2026 06:32 PM

அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது

அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது

அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!

கடந்த அதிமுக ஆட்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கல்வி, சுகாதாரத்துறை எப்படி செயல்பட்டது? என்ற தரவுகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுக்கான ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சியை கடந்த அதிமுக ஆட்சியுடன் ஒப்பிட்டு தமிழக அரசு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறைக்கான விவரங்களை கீழே காணலாம்.

சுகாதாரத்துறை:

மகப்பேறு இறப்பு விகிதம்:

2021 - 26 ஆட்சியில் ஒரு லட்சத்திற்கு 35 விகிதம் என்று அமைந்துள்ளது. இது 2016 -21 அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்திற்கு 60 என்று இருந்தது.

புதிய மருத்துவமனை கட்டிடங்கள்:

ரூபாய் 3 ஆயிரத்து 205 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்து 69 பணிகள் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நடந்துள்ளது. அதிமுக-வின் 2016 - 21 ஆட்சிக்காலத்தில் ரூபாய் 1079 கோடி மதிப்பில் 1133 பணிகள் நடந்துள்ளது.

புதிய மருத்துவர்கள்/ பணியாளர்கள் நியமனம்:

அதிமுக-வின் 2016 -21 ஆட்சிக்காலத்தில் 2 ஆயிரத்து 794 மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது 2021-26ம் ஆண்டு திமுக ஆட்சியில் 6 ஆயிரத்து 53 ஆக உயர்ந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை:

நிதி ஒதுக்கீடு:

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பள்ளிக்கல்விக்காக 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-21 அதிமுக ஆட்சியில் இந்த தொகை ரூபாய் 1.41 லட்சம் கோடியாக இருந்தது.

அறிவுசார் மையங்கள் (பெரிய நூலகங்கள்):

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் 6 அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் எந்த நூலங்களும் திறக்கப்படவில்லை.

ஆசிரியர்கள் நியமனம்:

மு.க.ஸ்டாலினின் இந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் 11 ஆயிரத்து 669 ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் 7 ஆயிரத்து 124 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், இதர வசதிகள்:

மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சியில் ரூபாய் 4 ஆயிரத்து 458 கோடி மதிப்பில் 31 ஆயிரத்து 616 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ரூபாய் 1580 கோடி மதிப்பில் 21 ஆயிரத்து 115 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தரவுகள் அனைத்தும் தமிழக அரசு இன்று நாளிதழ்களில் சாதனைகளாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் சுகாதாரம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்த காலத்திலே கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டது.

சுகாதாரத்துறையிலும் பல்வேறு அதிநவீன உயர் சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளிலே கட்டணங்கள் இன்றி பெறும் வசதிகளும் இருந்து வருகிறது. மலைக்கிராமங்கள், குக்கிராமங்களிலும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பணிகள் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த தரவுகள் மக்கள் மத்தியில் திமுக அரசின் சாதனைகளாகவும், அதிமுக ஆட்சியைக் காட்டிலும் தாங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான சான்றாகவும் திமுக இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது.

அதேசமயம், கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் புதியதாக 11 மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியும் திறக்கப்படவில்லை. மேலும், அந்த மருத்துவக்கல்லூரிகளில் தற்போது வரை பல இடங்களில் பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.