அதிமுக, அமமுகவில் இருந்தவர்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டார் செங்கோட்டையன்: டிடிவி தினகரன் விமர்சனம்
டிடிவி தினகரன்
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மாற்றுத் திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும். தன்னை வளர்த்து ஆளாக்கிய இயக்கமான அதிமுக அழிந்து போகும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது, அதிமுக மீது அவர் கொண்ட வன்மத்தைக் காட்டுகிறது.
அதிமுக, அமமுகவில் இருந்தவர்களை எல்லாம் அவர் அழைத்துக் கொண்டு சென்று தவெகவில் சேர்த்து தற்போது நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். தவெகவில் செங்கோட்டையனின் நிலை என்னவென்று எனக்குத் தெரியும். அதிமுக அழியாது, செங்கோட்டையன் வீழ்வார். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்னடைவை நோக்கிச் செல்கிறது. ஆதரவளித்த கட்சிகளே தற்போது தவெகவுக்கு எதிராக பேசி வருகின்றன. இன்னும் அவர்கள் உணரும் காலம் வரும்.